Short News

மிட்சுபிஷி டிரைட்டனை ரீபேட்ஜ் செய்யும் ஹோண்டா

மிட்சுபிஷி டிரைட்டனை ரீபேட்ஜ் செய்யும் ஹோண்டா

கார்கள், பைக்குகள் எனப் பல்வேறு வாகனங்களை விற்பனை செய்து வரும் ஹோண்டா நிறுவனம், அடுத்ததாகப் பிக்கப் டிரக் சந்தையிலும் களமிறங்கத் தயாராகி வருகிறது. இதற்காகப் புதிதாக ஒரு வாகனத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, மிட்சுபிஷி நிறுவனத்தின் பிரபலமான டிரைட்டன் பிக்கப் டிரக்கை அடிப்படையாகக் கொண்டு புதிய மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த வாகனம் வரும் 2028ம் ஆண்டு தென்கிழக்கு ஆசியச் சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
கார் கருப்புப் பெட்டிக்கு புதிய தரநிலை வெளியீடு

கார் கருப்புப் பெட்டிக்கு புதிய தரநிலை வெளியீடு

விமான விபத்து நடந்தால் என்ன காரணத்தால் விபத்து ஏற்பட்டது என்பதைக் கண்டறிய கருப்புப் பெட்டி உதவுகிறது. இந்த கருவிகள் மிக அதீத வெப்பம், குளிர் உள்ளிட்டவற்றால் பாதிக்ப்படாதவாறு தயாரிக்கப்படுகிறது. இதேபோல், கார்களிலும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள கருப்புப் பெட்டியை பொருத்துவதற்கான திட்டம் அரசு வசம் இருக்கிறது. இந்த நிலையில், இந்த கருவி எந்த நிலையிலும் பாதிக்கப்படாதவாறு இருப்பதற்கு ஏதுவாக புதிய தரநிலையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அறிமுகமான வேகத்தில் விற்றுத் தீர்ந்த டுகாட்டி பைக்!

அறிமுகமான வேகத்தில் விற்றுத் தீர்ந்த டுகாட்டி பைக்!

இத்தாலியைச் சேர்ந்த டுகாட்டி நிறுவனம், தனது பந்தய பாரம்பரிய வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் உருவாக்கிய ஃபார்முலா 73 (Formula 73) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ள இந்த பைக், செயல்திறனைத் தாண்டி அரிய மோட்டார்சைக்கிள்களைச் சேகரிக்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக வந்துள்ளது.
அல்ட்ராவயலெட் டெஸராக்ட் ஸ்கூட்டர் ஒருவழியாக சந்தைக்கு வருகிற

அல்ட்ராவயலெட் டெஸராக்ட் ஸ்கூட்டர் ஒருவழியாக சந்தைக்கு வருகிற

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அல்ட்ராவயலெட் நிறுவனம் மின்சார இருசக்கர வாகனச் சந்தையில் புதுமையான தொழில்நுட்பங்களுடன் கவனம் ஈர்த்து வருகிறது. செயல்திறன் மிக்க மின்சார பைக் மாடல்களை களமிறக்கி வரும் அல்ட்ராவயலெட் அடுத்து டெஸராக்ட் ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதற்கான ஆயத்தப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக வர இருக்கும் டெஸராக்ட் ஸ்கூட்டரானது 261 கிமீ வரை ரேஞ்ச், மணிக்கு 125 கி.மீ வேகம் வரை திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் புக்கிங் செய்து காத்திருக்கின்றனர்.