Short News

ஏசியன் கேம்ஸ்: இந்தியாவுக்கு இதுவரை 24 பதக்கங்கள்!

ஏசியன் கேம்ஸ்: இந்தியாவுக்கு இதுவரை 24 பதக்கங்கள்!

இந்தோனேசியாவில் நடந்து வரும் 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது. இதுவரை 6 தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளிப் பதக்கங்கள், மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது இந்தியா. 126 பதக்கங்களுடன் சீனா இப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. 95 பதக்கங்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளது ஜப்பான்.
வாணி ஜெயராம் கணவர் மரணம்!

வாணி ஜெயராம் கணவர் மரணம்!

பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் கணவரான ஜெயராம் இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த ஜெயராம், இன்று மரணமடைந்தார். அவர் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட வாணி ஜெயராம், திருமணத்திற்குப் பின்னர் தன் பெயரின் பின்பாதியுடன் தன் கணவர் பெயரையும் இணைத்துக் கொண்டார்.
பச்சிளம் குழந்தையை பெற்று எடுத்த 70 வயதான பெண்மணி: யார் காரணம்?

பச்சிளம் குழந்தையை பெற்று எடுத்த 70 வயதான பெண்மணி: யார் காரணம்?

பெண்கள், மாதவிடாய் ஏற்பட தொடங்கிய நிமிடம் முதல் பெண்கள் கருத்தரிக்க அதிகம் வாய்ப்புகள் இருக்கும்.இந்த வாய்ப்பு பெரும்பாலான பெண்கள் 40 அல்லது 45 வயதை எட்டும் பொழுது முட்டைகள் அனைத்தையும் இழந்து கருத்தரிக்கும் வாய்ப்பை இழந்து விடுவர். இந்த பதிப்பில் பச்சிளம் குழந்தையை பெற்று எடுத்த 70 வயதான பெண்மணியின் கதை பற்றி படித்து அறியலாம்.

கூகுள் போட்டோஸில் கொலாஜ் உள்ளிட்ட சூப்பர் அம்சங்கள்!

கூகுள் போட்டோஸில் கொலாஜ் உள்ளிட்ட சூப்பர் அம்சங்கள்!

கூகுள் நிறுவனத்தின் கூகுள் போட்டோஸ் செயலி அனைத்து ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இச்செயலியின் மூலம் நாம் அனிமேஷன்களையும் உருவாக்கி, நம் புகைப்படங்களை கிப் இமேஜாக மாற்றிக் கொள்ளும் சேவையும் உள்ளது. கொலாஜ், குயிக் எடிட், ஸ்லைட்ஷோ, ஸ்கேன் போட்டோஸ் உள்ளிட்ட மேலும் பல அம்சங்களும் கூகுள் போட்டோஸில் உள்ளன.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more