Short News

ஏசியன் கேம்ஸ்: இந்தியாவுக்கு இதுவரை 36 பதக்கங்கள்!

ஏசியன் கேம்ஸ்: இந்தியாவுக்கு இதுவரை 36 பதக்கங்கள்!

இந்தோனேசியாவில் நடந்து வரும் 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது. இதுவரை 7 தங்கப் பதக்கங்கள், 10 வெள்ளிப் பதக்கங்கள், மற்றும் 19 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது இந்தியா. இப்பட்டியலில் 175 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் நீடிக்கிறது. 123 பதக்கங்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளது ஜப்பான்.
மீண்டும் அம்மாவான த்ரிஷா

மீண்டும் அம்மாவான த்ரிஷா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் நடிப்பில் அடுத்த மாதம் 96 படம் திரைக்கு வரவுள்ளது. இதனையடுத்து திருஞானம் இயக்கத்தில் பரமபதம் விளையாட்டு என்ற படத்தில் மருத்துவராக த்ரிஷா நடிக்கின்றாராம். இதில் ஒரு குழந்தைக்கு தாயாகவும் நடிக்கவுள்ளார். என்னை அறிந்தால் படத்தையடுத்து மீண்டும் அவர் தாயாக நடிக்கவுள்ளார். 
வீடியோ சிக்கியது: பாஜகவுக்கு நெருக்கடியா?

வீடியோ சிக்கியது: பாஜகவுக்கு நெருக்கடியா?

கர்நாடகத்தில் நடைபெற்றும் வரும் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கு பணம் தருவது குறித்து பாஜகவினர் நடத்திய பேரம் தொடர்பான வீடியோ சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை வெளியிட ஆளும் தரப்பு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.
ஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா!

ஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா!

ஹரி இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செல்வராகவன் இயக்கத்தில் என்ஜேகே படத்தில் நடித்து வரும் சூர்யா, இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா இயக்கத்திலும், கே.வி.ஆனந்த் படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் ஹரி படத்திலும் நடிக்க சூர்யா முடிவு செய்துள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more