Short News

ஏசியன் கேம்ஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

ஏசியன் கேம்ஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் பேட்மிண்டன் தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை யாமகுச்சியை 21-17, 15-21, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம்,  மகளிர் பேட்மிண்டனில் இறுதிப் போட்டிக்கு பி.வி.சிந்து முன்னேறியுள்ளார்.
ரஃபேல் விவகாரம்: மத்திய பாதுகாப்புத்துறை விளக்கம்!

ரஃபேல் விவகாரம்: மத்திய பாதுகாப்புத்துறை விளக்கம்!

ரஃபேல் நிறுவனம் தனது வணிக ரீதியான பங்குதாரரை தேர்ந்தெடுத்ததில் இந்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அதிபரின் பேச்சு மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோரின் விமர்சனங்களை தொடர்ந்து பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஹீரோவாகும் அப்புக்குட்டி!

மீண்டும் ஹீரோவாகும் அப்புக்குட்டி!

காமெடி கேரக்டரில் நடித்து வந்த அப்புக்குட்டி ‘அழகர்சாமியின் குதிரை' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். பின்னர் அவர் நடித்த மன்னாரு என்ற படம் ஓடவில்லை. பின்னர் காமெடி வேடத்தில் நடித்து வந்த அவர் மீண்டும் வாழ்க விவசாயி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியகாக நடிகை வசுந்தரா நடிக்கவுள்ளார். 
6 வாரத்தில் பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல்: தருண் அகர்வால்!

6 வாரத்தில் பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல்: தருண் அகர்வால்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்து 6 வாரங்களில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை அளிக்கப்படும் என ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு, அதற்கான குழுவை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more