Short News

ஏசியன் கேம்ஸில் பறிபோன தமிழக வீரரின் வெண்கலம்!

ஏசியன் கேம்ஸில் பறிபோன தமிழக வீரரின் வெண்கலம்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீரர் லக்சுமணனுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அவர் தகுதியிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஓட்டப் பந்தயத் தடத்திற்கு வெளியே அவர் தன் காலை வைத்ததால், இப்போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் லக்சுமணன்.
சோயிப் மாலிக் அவுட்: பாகிஸ்தான் 100/5 (27 ஓவர்)

சோயிப் மாலிக் அவுட்: பாகிஸ்தான் 100/5 (27 ஓவர்)

ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி உச்சக்கட்ட பரபரப்பில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் பாகிஸ்தான் அணி, 27 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. சற்றுமுன் சோயிப் மாலிக் 43 ரன்னில் ரன்-அவுட்டாகி வெளியேறினார்.
எச்.ராஜாவுக்கு நீதிமன்றம் மேலும் ஓரு நோட்டீஸ்!

எச்.ராஜாவுக்கு நீதிமன்றம் மேலும் ஓரு நோட்டீஸ்!

நீதிமன்றம் பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜாவுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் மேலும் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எச்.ராஜா அக்டோபர் 3-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் சுதா புகாரின்பேரில் இந்த நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 
நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் விடுதலை!

நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் விடுதலை!

லண்டனில் சொத்துகள் வாங்கியது தொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரீஃப், அவரின் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகளும் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகளும் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. இந்நிலையில், இருவரின் தண்டனையை ரத்து செய்து இஸ்லமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more