Short News

அஜித் அணி 3வது இடமா, 38வது இடமா? குழப்பத்திற்கான விடை இதோ!

அஜித் அணி 3வது இடமா, 38வது இடமா? குழப்பத்திற்கான விடை இதோ!

இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட் மோட்டார் பந்தய களத்தில் நடைபெற்ற 2026ம் ஆண்டுக்கான மிச்செலின் லி மான்ஸ் கோப்பைக்கான கார் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த நடிகரும், ரேஸருமான அஜித்குமார் நேற்று பங்கேற்றார். அஜித் குமார் பங்கேற்பாலும் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பந்தயத்தைத் தொடங்கி வைத்ததாலும் இந்தியாவில் அதிக கவனம் பெற்றது.
பிஒய்டி சீல் யு ஹைப்ரிட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்

பிஒய்டி சீல் யு ஹைப்ரிட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தையில் ஏற்கனவே வலுவான இடத்தை பிடித்துள்ள சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம், அடுத்த கட்டமாக Plug-in Hybrid (PHEV) வகை மாடல்களையும் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அந்த வரிசையில் நிறுவனத்தின் முதல் ப்ளக் இன் ஹைப்ரிட் மாடலாக BYD Seal U என்ற புதிய கார் மாடலை விரைவில் இந்தியாவில் களமிறக்க உள்ளது.
ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் புதிய ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 பைக்!

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் புதிய ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 பைக்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது கிளாமர் எக்ஸ் 125 பைக்கில் முக்கியமான பாதுகாப்பு வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஏபிஎஸ் மற்றும் ஒருங்கிணைந்த பிரேக்கிங் அமைப்புடன் கூடிய புதிய கிளாமர் எக்ஸ் 125 பைக் ரூ.1,01 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியா வந்த சீன அதிபரின் நடமாடும் கோட்டை!

இந்தியா வந்த சீன அதிபரின் நடமாடும் கோட்டை!

இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் புதுடெல்லி வந்துள்ளார். இந்த பயணத்தின் அவர் பயன்படுத்திய அதிநவீன சொகுசு பாதுகாப்பு காரான ஹாங்கி N701 (Hongqi N701) என்ற பெயரில் அழைக்கப்படும் அதிகாரப்பூர்வ கார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.