Short News

குழந்தைக்கு 'ஏசியன் கேம்ஸ்' என பெயர்: இந்தோனேசிய தம்பதி அசத்தல்!

குழந்தைக்கு 'ஏசியன் கேம்ஸ்' என பெயர்: இந்தோனேசிய தம்பதி அசத்தல்!

புதிதாகப் பிறந்த தங்கள் பெண் குழந்தைக்கு 'அபிடா ஏசியன் கேம்ஸ்' என்று பெயர் சூட்டியுள்ளனர் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர். 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் பலேம்பாங் நகரில், போட்டிகள் தொடங்கிய சமயத்தில் இக்குழந்தை பிறந்ததால் அதற்கு இப்பெயர் சூட்டப்பட்டதாக அதன் தந்தை தெரிவித்துள்ளார்.
ரூ.900க்கு புதிய டீடெல் போன்கள்!

ரூ.900க்கு புதிய டீடெல் போன்கள்!

டீடெல் என்ற புதிய போன் நிறுவனம் புதிய மூன்று மொபைல் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டீடெல் டி1 வைப், டி1 பல்ஸ், டி1 ஷைன் என்ற பெயரில் புதிய ஃபீச்சர்போன்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 1.77 இன்ச் டிஸ்ப்ளே, டிஜிட்டல் கேமரா, 1050 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.810, ரூ.820, ரூ.830 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
கேக் வாங்கினால் 1 லி.பெட்ரோல் இலவசம்! அலைமோதும் கூட்டம்!!

கேக் வாங்கினால் 1 லி.பெட்ரோல் இலவசம்! அலைமோதும் கூட்டம்!!

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் தினமும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதில் வேலூரில் அண்ணாசாலையில் உள்ள பேக்கிரியில் 1 கிலோ கேக் வாங்கினால், 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியுள்ளது. இதைப்பார்த்த பொதுமக்கள் பெட்ரோலுக்காக கிலோ கேக் வாங்கி செல்கின்றனர். இதனால் அந்த பேக்கரியில் கூட்டம் அலைமோதுகிறது.
ரகுமானின் ஒன் ஹார்ட் சர்வதேச விழாவுக்கு தேர்வு!

ரகுமானின் ஒன் ஹார்ட் சர்வதேச விழாவுக்கு தேர்வு!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் ஒன் ஹார்ட் இசைப்படம் கான்சோனன்ஸ் திரைப்பட விழாவுக்கு தேர்வாகி இருக்கிறது. மேலும் உலகம் முழுவதில் இருந்தும் 22 படங்கள் இந்த விழாவில் திரையிட தேர்வாகி இருக்கின்றன. ரகுமானின் நேர்காணலுடன் இந்த படம் உருவாகி இருக்கிறது. ஆனால் இந்த படம் தமிழகத்தில் வெளியாகி வரவேற்பை பெறவில்லை.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more