Short News

வியட்னாம் பேட்மிட்டன் லீக்: இந்தியா வீரருக்கு வெள்ளிப் பதக்கம்!

வியட்னாம் பேட்மிட்டன் லீக்: இந்தியா வீரருக்கு வெள்ளிப் பதக்கம்!

வியட்னாமில் நடைபெற்று வரும் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் லீக் தொடரில் நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் இக்ராஷியை இந்திய வீரர் ஜெயராம் வீழ்த்தினார். இதையடுத்து, இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தோனேஷியாவின் ஷேசர் ஹிரன் ரஷ்டவிடோவுடன் ஜெயராம் மோதினார். இதில் 14-21, 10-21 என்ற செட் கணக்கில் ரஷ்டவிடோவிடம் தோல்வி அடைந்தார் அஜய் ஜெயராம். இதில் ஜெயராம் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
கர்ப்பிணிக்காக படைக்கப்பட்ட பழம்!

கர்ப்பிணிக்காக படைக்கப்பட்ட பழம்!

தினம் ஒரு கிவி பழத்தை சாப்பிட்டாலே நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும். கர்ப்பிணிகள் இதை சாப்பிட்டால் இரத்தம் உற்பத்தி அதிகரிக்கும் . கர்ப்பிணிகளுக்கு தேவையான முக்கிய சத்துகளில் ஒன்றான போலிக் அமிலம் கிவி பழத்தில் அதிக அளவில் நிறைந்துள்ளது. கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துகளை அதிகம் கொண்டிருப்பதால் எலும்புகள் மற்றும் பற்களின் வலிமை அதிகரிக்கிறது. 
உலக கோப்பை டாங்கோ நடனப் போட்டி துவக்கம்!

உலக கோப்பை டாங்கோ நடனப் போட்டி துவக்கம்!

அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஐரிசில் நகரில் பிரபல டாங்கோ நடன தொடருக்கான உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டி இன்று முதல் தொடங்கியது. இந்த பாரம்பரிய மிக்க நடன போட்டியில்பல்வேறு நாடுகளில் இருந்து வந்த இளம் ஜோடிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் ஜோடிகளின் நடன அசைவுகள் ரசிகர்களை வெகுவாக வசீகரித்தது!
அசுத்தமான ரயில் நிலையங்களின் பட்டியலில் நாகர்கோவில்!

அசுத்தமான ரயில் நிலையங்களின் பட்டியலில் நாகர்கோவில்!

இந்திய தர கவுன்சில் என்ற அமைப்பு இந்தியாவிலேயே அசுத்தமான ரயில் நிலையங்கள் குறித்து கணக்கெடுப்பை நடத்தியது. இந்தியாவில் உள்ள மிகப் பெரிய 407 ரயில் நிலையங்களில் சர்வே எடுக்கப்பட்டது. இந்த பட்டியலில் தமிழகத்தின் நாகர்கோவில் ரயில் நிலையம் இடம் பெற்றுள்ளது. இந்த ரயில் நிலையம் உள்ள தொகுதி மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் தொகுதியாகும்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more