Short News

இன்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்ந்தது!

இன்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்ந்தது!

காவிரியில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 20,742 கன அடியிலிருந்து 26,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதில் அணையில் இருந்து விநாடிக்கு 25,800 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் 120.10 அடியாகவும்நீர்இருப்பு 93.48 டிஎம்சியாகவும் இருக்கிறது. மேலும், லிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 28,000 கனஅடியில் இருந்து 34,000 கனஅடியாக உயர்ந்துள்ளது
அமெரிக்க அணுஅயுதங்களை குறைத்தால் மட்டுமே  இது நடக்கும்!

அமெரிக்க அணுஅயுதங்களை குறைத்தால் மட்டுமே இது நடக்கும்!

வட கொரியா தலைநகர் பியாங்யாங் என்ற இடத்தில் இன்று வட மற்றும் தென் கொரியா அதிபர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் அணு ஆயுத ஏவுகணை தளத்தை நிரந்தமாக மூடும் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைழுத்தாகியுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தென்கொரிய அதிபர், அமெரிக்க அரசு அணுஅயுதங்களை குறைப்பதற்கான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, வடகொரியா அணுஆயுத உற்பத்தி கூடங்களை மூடும்" என்றார்.
பாகிஸ்தான் மண்ணை கவ்வியது! இந்தியா அபார வெற்றி!!

பாகிஸ்தான் மண்ணை கவ்வியது! இந்தியா அபார வெற்றி!!

ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி உச்சக்கட்ட பரபரப்பில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 169 ரன்களில் சுருண்டது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா, 29 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா?

உண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா?

'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா? ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். பலரும் ஹலால் என்றால் சுத்தம் என்று நினைக்கிறோம். ஆனால் அது தான் தவறு. ஹலால் என்பதன் உண்மையான அர்த்தமே வேறு.

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more