Short News

கேரளாவில் கனமழைக்கு 33 பேர் பலி- முதல்வர் அறிவிப்பு!

கேரளாவில் கனமழைக்கு 33 பேர் பலி- முதல்வர் அறிவிப்பு!

கேரளாவிற்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள உதவிகள் வழங்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் என முதல்வர் பினராயி விஜயன் பேட்டியளித்துள்ளார். மேலும், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 33பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேரை காணவில்லை, தற்போது ராணுவம் மாநில காவல்துறை, பேரிடர் மீட்புப் படை ஆகியவை தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
மனைவியை கொல்ல விமானத்தை வீட்டின் மீது மோதிய கணவன்!

மனைவியை கொல்ல விமானத்தை வீட்டின் மீது மோதிய கணவன்!

அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது கணவன் குடித்து விட்டு அடிப்பதாக போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த கணவன் தன் மனைவியை கொல்ல தனது முதலாளியின் விமானத்தை எடுத்து கொண்டு அவர் மனைவி இருந்து வீட்டின் மீது மோதியுள்ளது. இச்சம்பவத்தில் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் கணவன் உயிரிழந்தார்.  
திராவிட இயக்கத்தின் 3வது அத்தியாயம் யார் தெரியுமா?

திராவிட இயக்கத்தின் 3வது அத்தியாயம் யார் தெரியுமா?

திராவிடர் கழகம் சார்பில் திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பேசிய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, "திராவிட இயக்கத்தின் 3வது அத்தியாயம், கருணாநிதி, திமுகவை எந்த பஞ்ச தந்திரங்களாலும் அசைத்துப் பார்க்க முடியாது, திமுக கெட்டியான பூட்டு; கள்ளச்சாவி போட்டுவிடாமல் தொண்டர்கள் காக்க வேண்டும்" என்றார்.
துல்லியமாக நடனமாடும் டேன்ஸ் ரோபோக்கள்!

துல்லியமாக நடனமாடும் டேன்ஸ் ரோபோக்கள்!

துல்லியமாக நடனமாடும் டேன்ஸ் ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ நடனத்தில் உலக சாதனையை முறியடிக்கும் அளவிற்கு துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ குவாட்கொப்டர் எனப்படும் பறக்கும் தொழில்நுட்பமும் உள்ளடக்கியுள்ளது. இதனால் இந்த ரோபோ அந்தரத்திலும் நடன அசைவுகளை மேற்கொள்ளகூடியதாக உள்ளது. 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more