Short News

தமிழகத்தில் 7167 ஏக்கள் நிலம் பாதிப்பு: தமிழக அமைச்சர்!

தமிழகத்தில் 7167 ஏக்கள் நிலம் பாதிப்பு: தமிழக அமைச்சர்!

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் வெள்ளத்தால் ஏழாயிரத்தி 167 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
ஆசியா கோப்பை: தோனி டக்-அவுட்! இந்தியா - 252/5 (43)

ஆசியா கோப்பை: தோனி டக்-அவுட்! இந்தியா - 252/5 (43)

துபாயில் ஆசிய கோப்பை தொடரின் 4வது லீக் போட்டி ஹாங் காங்- இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்தியா, 42 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இதில் முன்னாள் கேப்டன் தோனி டக்-அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 127 ரன்கள் குவித்து அவுட்டாகியுள்ளார்.
கடம்பூர் ராஜூவுக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன்!

கடம்பூர் ராஜூவுக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன்!

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கப்பட்டது அதிமுக அரசு போட்ட பிச்சை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், "மெரினாவில் இடத்தை அரசு ஒதுக்கி இருந்தால் பிச்சை, நீங்கள்தான் ஒதுக்கவே இல்லையே, அமைச்சருக்கான தகுதி, கன்னியத்தை மறந்து கடம்பூர் ராஜூ பேசியிருக்கிறார்" என்றார்.
ஆசியா கோப்பை: சதம் விளாசிய தவான்!

ஆசியா கோப்பை: சதம் விளாசிய தவான்!

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4வது லீக் போட்டி ஹாங் காங்- இந்திய அணிகள் விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்தியா, 39 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இதில் ஷிகர் தவான் 105 பந்துகளில் சதம் விளாசினார். தற்போது தவான்(125) மற்றும் தினேஷ்(18) கார்த்திக் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more