Short News

தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ்!

தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ்!

தமிழகத்தில் ஏர் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் செயல்படத் தொடங்கும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உடல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வோருக்கு இது பெருமளவில் பயன்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தமிழக-கேரள எல்லையில் 40 மருத்துவக் குழுக்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 20,000 பேருக்கு சிகிச்சை அளித்ததாகத் தெரிவித்தார்.
குளிர்காலத்தில் தம்பதியர்கள் கலவி கொண்டால் நடக்கும் நன்மை அறிவீரா?

குளிர்காலத்தில் தம்பதியர்கள் கலவி கொண்டால் நடக்கும் நன்மை அறிவீரா?

ஒல்லியான குழந்தைகள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் குறைபாட்டினால் பிறக்கின்றனர்; தம்பதியர் மேற்கொள்ளும் பழக்கங்கள் தான் அவர்கள் கருத்தரிப்பை எட்டும் பொழுது, குழந்தையின் நலத்தை தீர்மானிக்கும். இந்த பதிப்பில் குளிர்காலத்தில் தம்பதியர்கள் கலவி கொண்டால் நடக்கும் நன்மை மற்றும் ஒல்லியான குழந்தைகள் பிறக்க தம்பதியர்கள் குளிர்காலத்தில் கலவி கொள்வது தான் காரணமா என்று படித்து அறியலாம்.

நான் ஒருமையில் பேசியது தவறுதான்- 'ஜகா' வங்கிய கருணாஸ்!

நான் ஒருமையில் பேசியது தவறுதான்- 'ஜகா' வங்கிய கருணாஸ்!

தான் தலைமறைவானதாக வெளியான தகவலுக்கு எம்.எல்.ஏவும் நடிகருமான கருணாஸ் மறுப்பு தெரிவித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ஆர்ப்பாட்டத்தில் ஏதேனும் தவறுதலாக பேசியிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன், ஆனால் தவறு செய்யும் அதிகாரிகளை தண்டிக்காதது ஏன்?,  எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான்" என்றார்.
சீன ஓபன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த் படுதோல்வி!

சீன ஓபன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த் படுதோல்வி!

ஜங்சௌ நகரில் நடைபெற்று வரும் சீன ஓபன் பேட்மிண்டன் தொடரின் இன்றைய ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், ஜப்பன் வீரர் கெண்டா மோமோடாவுடன் மோதினார். இதில், 9-21, 11-21 என்ற செட் கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்த் படுதோல்வி அடைந்தார். இதன்மூலம் ஜப்பன் வீரர் கெண்டா மோமோடா அறையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more