Short News

மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு தொடங்குகிறது

மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு தொடங்குகிறது

பிஎஸ்என்எல் அதிவேக பிராட்பேன்ட் இணைப்புகளை சட்ட விரோதமாக சன் தொலைக்காட்சிக்கு வழங்கியது தொடர்பான வழக்கில் சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம், மாறன் சகோதரர்கள் உட்பட விடுவிக்கப்பட்ட 7 பேரும் வழக்கை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில், விடுவிக்கப்பட்ட 7 பேர் மீதும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் குற்றச்சாட்டு பதிவை சிபிஐ தொடங்குகிறது 
கோவிலுக்கு காவடி தூக்கும் முதல்வர்: தத்தளிக்கும் கர்நாடக!

கோவிலுக்கு காவடி தூக்கும் முதல்வர்: தத்தளிக்கும் கர்நாடக!

கர்நாடகத்தில் உள்ள குடகு, ஹாசன், தக்‌ஷன கனடா, சிக்மங்களுரூ, சிவமொகா உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து கோவில் கோவிலாக ஏறி இறங்கும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்க்க வரவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை?

வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை?

வடக்கு வங்கக் கடல் பகுதியில் நாளை மறுநாள் (ஆக.18) புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஒடிசா அருகே ஏற்கனவே நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகர்ந்து கொண்டிருப்பதால் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளது. இதற்கிடையே, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
புதிய கார்களின் அறிமுகத்தை நிறுத்தபோகிறது மஹிந்திரா...!

புதிய கார்களின் அறிமுகத்தை நிறுத்தபோகிறது மஹிந்திரா...!

மஹிந்திரா நிறுவனம் அடுத்த 8 மாதங்களில் 3 புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன் பின் ஒரு ஆண்டிற்கு எந்த வித புதிய மாடல் காரையும் அறிமுகப்படுத்தப்போவதில்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் 2020ம் ஆண்டு பிஎஸ் 6 புகை உமிழ்வு கட்டுப்பாடு நடைமுறைக்கு வருவதால் இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் எடுத்துள்ளது.

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more