Short News

கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குளை முடித்து வைக்க மனு!

கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குளை முடித்து வைக்க மனு!

திமுக தலைவர் கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை முடித்து வைக்கக் கோரி திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திமுக தரப்பில் திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவர் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்படும் என தெரிகிறது.
தமிழகத்தில் 78 தடுப்பணைகள்: தமிழக முதல்வர்!

தமிழகத்தில் 78 தடுப்பணைகள்: தமிழக முதல்வர்!

தமிழகத்தில் 78 தடுப்பணைகளை கட்டுவதற்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆற்றில் வரும் நீர் ஒரு சொட்டு கூட வீணாக கடலில் கலக்காத வகையில் தடுப்பணைகள் கட்டப்படும் எனவும் ஏரி, குளங்களை ஆழப்படுத்தவும், நதிகளை இணைப்பது குறித்தும் ஆய்வு செய்ய சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது என முதல்வர் கூறினார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானதுதான்: தமிழிசை!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானதுதான்: தமிழிசை!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானதுதான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவும், எத்தனால் மூலம் எரிசக்தி கொண்டு வரவும் நடவடிக்கை மத்திய அரசு தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தமிழிசை கூறியுள்ளார்.
”மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் உயிரிழப்பு!”

”மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் உயிரிழப்பு!”

மது குடிப்பதால் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு சுமார் முப்பது லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மது குடிப்பதால் மட்டும் ஆல்கஹால் உள்ளிட்ட இருநூறு விதமான நோய்கள் உருவாவதாகவும் கல்லீரல் பாதிப்பு, சிலவகை புற்று நோய்கள் ஏற்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more