Short News

மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழக கடலோர பகுதிகளில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வானிலை மோசமாக உள்ளதன் காரணமாக  தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க  செல்ல வேண்டாம் எனவும் இந்திய  வானிலை ஆய்வு  மையம் கூறியுள்ளது.
ராஜ்பவனில் ஈபிஎஸ் நட்ட ரோஜா செடிக்கு 'காவேரி' என்று பெயர்!

ராஜ்பவனில் ஈபிஎஸ் நட்ட ரோஜா செடிக்கு 'காவேரி' என்று பெயர்!

72வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ், சபாநாயகர் தனபால், தலைமை நீதிபதி தஹில் ரமானி பங்கேற்றனர். அப்போது, ராஜ்பவனில் ரோஜா தோட்டம் அமைக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆளுநர் நட்ட செடிக்கு கங்கா என்றும், முதல்வர் நட்ட செடிக்கு காவேரி என்றும் பெயரிடப்பட்டது
ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து: தமிழக முதல்வர் பங்கேற்பு!

ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து: தமிழக முதல்வர் பங்கேற்பு!

சுதந்திர தினத்தையொட்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால், சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமை நீதிபதி தஹில் ரமானி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கேரளாவுக்கு அனைத்து உதவிகளும் செய்துதரப்படும்: மோடி!

கேரளாவுக்கு அனைத்து உதவிகளும் செய்துதரப்படும்: மோடி!

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் குறித்து முதலமைச்சர் பினராய் விஜயனிடம் கேட்டறிந்ததாகவும் கூறியுள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more