Short News

கலைஞருக்கு நினைவேந்தல் கூட்டம்: நடிகர் சங்கம் அறிவிப்பு!

கலைஞருக்கு நினைவேந்தல் கூட்டம்: நடிகர் சங்கம் அறிவிப்பு!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆகஸ்ட் 13ஆம் தேதி திரையுலகம் சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற உள்ளது.சென்னை காமராஜர் அரங்கில் நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதள அடிமைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்!

சமூக வலைதள அடிமைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்!

உலக மக்கள் தொகையின் கால்வாசிக்கும் அதிகமானோர் சமூக வலைதளத்திற்கு அடிமையாகவுள்ளனர். இவர்கள் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவன் மூலம் ‘டெனோசினோவிடஸ்' எனும் தசை கோளாறு ஏற்படுகிறது. கழுத்துவலி, பின்புற முதுவலி அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் மணிக்கட்டு நோய் வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 
கசமுச படம் எடுத்த இயக்குனருக்கு கார் பரிசு!

கசமுச படம் எடுத்த இயக்குனருக்கு கார் பரிசு!

ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியாக பியார் பிரேமா காதல் படம் இந்த தலைமுறையினர் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் இளனுக்கு கார் பரிசு அளித்துள்ளார். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.
காதலர் இல்லை: நிவேதா பேட்டி!

காதலர் இல்லை: நிவேதா பேட்டி!

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ். சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்தின் முதன்மை பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். பத்திரிகை பேட்டியில் ஒன்றில் தனக்கு காதலர் இன்னும் அமையவில்லை என்றும் அதற்கான நேரமும் தனக்கு இல்லை எனக் கூறியுள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more