Short News

கோவை, நீலகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

கோவை, நீலகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வட மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
உடனடியாக தேசிய பேரிடராக அறிவியுங்கள்: ராகுல் ட்விட்!

உடனடியாக தேசிய பேரிடராக அறிவியுங்கள்: ராகுல் ட்விட்!

கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்விட் செய்துள்ளார். லட்சக்கணக்கான கேரள மக்களின் எதிர்காலம் அபாயத்தில் உள்ளது எனக் பதிவிட்டுள்ள ராகுல் எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக தேசிய பேரிடராக அறிவியுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நண்பகல் 12:00க்கு உங்கள் ஊர்களில் வெப்பநிலை!

நண்பகல் 12:00க்கு உங்கள் ஊர்களில் வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று நண்பகல் 12 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-33; மதுரை-33; கோயம்புத்தூர்-28; திருச்சி-31; திருநெல்வேலி-30; திண்டுக்கல்-32; ஈரோடு-32; சேலம்-31; சிவகாசி-30; தஞ்சாவூர்-33; தூத்துக்குடி-31; திருப்பூர்-30; வேலூர்-35; ஊட்டி-16; கொடைக்கானல்-17; ஏற்காடு-23; ஏலகிரி-31; வேடந்தாங்கல்-34.
கேரள வெள்ளம்: இழப்பு-ரூ.19,512 கோடி; கேட்டது ரூ.1,000 கோடி; கிடைத்தது ரூ.500 கோடி!

கேரள வெள்ளம்: இழப்பு-ரூ.19,512 கோடி; கேட்டது ரூ.1,000 கோடி; கிடைத்தது ரூ.500 கோடி!

கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தினால் ரூ.19,512 அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு, இடைக்கால நிதியாக ரூ.1,000 கோடி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், ரூ.500 கோடியை மட்டுமே வெள்ள நிவாரண நிதியாக அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more