Short News

சென்னையில் மாலை/இரவில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னையில் மாலை/இரவில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் தோன்றிய மேலடுக்கு சுழற்சி இன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படுகிறது; மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாம்.
இந்தியாவிடம் திணறி வரும் பாகிஸ்தான்! PAK 73/2!!

இந்தியாவிடம் திணறி வரும் பாகிஸ்தான்! PAK 73/2!!

ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5வது லீக் போட்டி இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் பாகிஸ்தான், 18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்துள்ளது. இதில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்தியாவில் அறிமுகமான பிரம்மாண்ட சாம்சங் எல்.இ.டி டிவி!

இந்தியாவில் அறிமுகமான பிரம்மாண்ட சாம்சங் எல்.இ.டி டிவி!

சாம்சங் நிறுவனம் பொழுதுபோக்கு அம்சங்களில் புதிய அறிமுகத்தைக் கொண்டு வந்துள்ளது. "எல்.இ.டி ஃபார் ஹோம்" என்ற புதிய டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.1 கோடி முதல் ரூ.3.5 கோடி வரையில் உள்ளது. இதன் மாடல்களாக 110 இஞ்ச் FHD, 130 இஞ்ச் FHD, 220 இஞ்ச் UHD, 260 இஞ்ச் UHD ஸ்கிரீன் டிவிகள் விற்பனைக்கு வருகின்றன.  
இன்று அசத்துவார்களா பும்ரா, ஹர்திக் பாண்டியா?

இன்று அசத்துவார்களா பும்ரா, ஹர்திக் பாண்டியா?

ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5வது லீக் போட்டி உச்சக்கட்ட பரபரப்பில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில் ஷர்துல் தாக்குர், கலீல் அகமட் ஆகியோருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.  
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more