Short News

கதறியழும் அழகிரி, ஸ்டாலின்

கதறியழும் அழகிரி, ஸ்டாலின்

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை ஏந்திக் கொண்டு வந்த ராணுவ வாகனம் தற்போது சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து சேர்ந்துள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதனையடுத்து கருணாநிதியின் குடும்பத்தினர் கருணாநிதியின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். கருணநிதி சவப்பெட்டியில் வைக்கும் போது அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்டோர் கதறி அழுதனர்.
ஜெ.க்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு சம்மன்!

ஜெ.க்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு சம்மன்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசின் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இதில். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் கில்னானி, அஞ்சன் டிரிக்கா நிதிஷ் நாயக் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 23, 24ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் கொள்ளிடம் இரும்பு பாலத்தில் விரிசல்!

வெள்ளத்தால் கொள்ளிடம் இரும்பு பாலத்தில் விரிசல்!

கர்நாடகவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரியில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. திருச்சியில் காவிரி, கொள்ளிடம் இரு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் கொள்ளிடம் அணைக்கு அருகில் உள்ள இரும்பு மேம்பாலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது மேம்பாலத்தில் ஆபத்தான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
டெல்லி விஜய்காட்டில் வாஜ்பாய்-க்கு நினைவிடம்!

டெல்லி விஜய்காட்டில் வாஜ்பாய்-க்கு நினைவிடம்!

சிறுநீரக கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று காலமானார். அவரது இறுதி சடங்கு நாளை டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி விஜய்காட் பகுதியில் வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க 1.5 ஏக்கர் நிலத்தை நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more