Short News

ஒரே நாளில் 500 ஏத்தர் கோனார்க் ஸ்கூட்டர்கள் டெலிவரி!

ஒரே நாளில் 500 ஏத்தர் கோனார்க் ஸ்கூட்டர்கள் டெலிவரி!

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் டெல்லியில் ஒரே நாளில் 500 கோனார்க் (Konarc) மின்சார ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து அசத்தி உள்ளது. கடந்த 25ந் தேதி நடைபெற்ற இதற்கான சிறப்பு நிகழ்ச்சியில், வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பங்கேற்று புதிய ஸ்கூட்டர்களை மகிழ்ச்சியுடன் டெலிவிரி பெற்றுச் சென்றனர்.
அதிகம் விற்பனையாகும் டாப்- 10 கார்களுக்கான மாத EMI விபரம்

அதிகம் விற்பனையாகும் டாப்- 10 கார்களுக்கான மாத EMI விபரம்

தீபாவளி பண்டிகைக்கு புதிய கார் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு ஏதுவாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களுக்கான டவுன் பேமண்ட், மாதத் தவணை உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் வழங்கி இருக்கிறோம். ஹேட்ச்பேக் முதல் எஸ்யூவி வரை பல்வேறு வகையான கார்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விதத்தில் இந்த பட்டியல் அமைந்துள்ளது. இந்தப் பட்டியலில் பெரும்பாலானோரின் விருப்பமான இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரபலமான 10 கார் மாடல்களின் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை அடிப்படையில், முன்பணம் மற்றும் மாதத் தவணை விவரங்களைப் பார்க்கலாம்.
புதிய டிரையம்ப் டைகர் 1200 பைக் இந்தியாவுக்கு எப்போது?

புதிய டிரையம்ப் டைகர் 1200 பைக் இந்தியாவுக்கு எப்போது?

பிரீமியம் அட்வென்ச்சர் டூரர் பைக் பிரிவில் தனது ஆதிக்கத்தைத் தொடரும் நோக்கில், டிரையம்ப் நிறுவனம் 2027ம் ஆண்டுக்கான டைகர் 1200 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக பவர், மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன், நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் எனப் பல மாற்றங்களுடன் வரும் இந்த பைக், இந்தியாவில் வரும் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகமாக உள்ளது.
புதிய ஹூண்டாய் பேயான்: வேரியண்ட் வாரியாக வசதிகள், விலை

புதிய ஹூண்டாய் பேயான்: வேரியண்ட் வாரியாக வசதிகள், விலை

இந்தியாவில் எஸ்யூவி வாங்க திட்டமிடுபவர்களின் எதிர்பார்ப்புகள் மாறி வருகின்றன. குறைவான விலையில் நல்ல வசதிகள் கொண்ட கார் வேண்டும் என்பதுடன், பாதுகாப்பு, தொழில்நுட்பம், ஓட்டுவதற்கான எளிமை ஆகியவற்றுக்கும் வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பல்வேறு வசதிகளுடன் ஹூண்டாய் பேயான் கார் வந்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன.