Short News

கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்க போகும் டாடா!

கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்க போகும் டாடா!

இந்திய சந்தையில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக மிகவும் விலை குறைவான ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களின் விற்பனை குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. எஸ்யூவி ரக கார்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
85% எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகப்படுத்த முயற்சி?

85% எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகப்படுத்த முயற்சி?

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமானது புதிய வரைவு ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ல் திருத்தங்களைச் செய்வதற்காக இந்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது எத்தனால் கலந்த எரிபொருளின் பயன்பாடு அதிகரித்திருப்பதோடு, மாற்று எரிபொருள்கள் மீதான கவனமும் அதிகரித்து வருகிறது. எனவே, அவற்றையும் விதிமுறைகளில் சேர்க்கும் நோக்கத்தோடு இந்த வரைவை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இலட்சக்கணக்கில் கடல் கடந்து செல்லும் மாருதி சுஸுகி கார்கள்!

இலட்சக்கணக்கில் கடல் கடந்து செல்லும் மாருதி சுஸுகி கார்கள்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் கடந்த ஒரு ஆண்டு காலக்கட்டத்தில் மட்டும் வழக்கத்தை காட்டிலும் சுமார் 1 லட்சம் கார்களை அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி (Export) செய்து அசத்தியுள்ளது. அப்படி எத்தனை இலட்சம் கார்களை மாருதி சுஸுகி ஏற்றுமதி செய்துள்ளது என்பதையும், இதில் புதிய இ-விட்டாரா (e-Vitara) எலெக்ட்ரிக் காரின் பங்களிப்பு என்ன என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அப்டேட்

பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அப்டேட்

இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள். சேட்டக் லைன்-அப்பில் மூன்று விதமான பேட்டரி பேக் தேர்வுகளுடன் ஐந்து வேரியன்ட்களாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது பஜாஜ். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தற்போது பெர்ஃபாமன்ஸ் மற்றும் பயன்பாட்டு அப்டேட்களை வழங்கியிருக்கிறது அந்நிறுவனம்.