Short News

கருணாநிதிக்கு மத்திய அமைச்சரவை மவுன அஞ்சலி!

கருணாநிதிக்கு மத்திய அமைச்சரவை மவுன அஞ்சலி!

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் கடந்த செவ்வாய் கிழமை காலமானார். இதையடுத்து, பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு கருணாநிதி உடல் மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு அமைச்சர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
கேரளாவுக்கு நிவாரணப் பொருள் அனுப்பிய மதுரை மாநகராட்சி!

கேரளாவுக்கு நிவாரணப் பொருள் அனுப்பிய மதுரை மாநகராட்சி!

கனமழை காரணமாக கேரள மாநிலம் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி சார்பில் கேரளாவுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. நிவாரணப் பொருட்கள் அடங்கிய லாரிகளை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் கொடியசைத்து அனுப்பிவைத்தார்.
தங்கம் விலை இன்றும் குறைவு!

தங்கம் விலை இன்றும் குறைவு!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட இன்று ஒரு கிராமுக்கு ரூ.11 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் தற்போது ஒரு கிராமுக்கு ரூ.2,806 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.22,448 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.29,460க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.40.00 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.40,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
27 தமிழக மீனவர்களுக்கு சிறை நீட்டிப்பு: குடும்பத்தினர் சோகம்!

27 தமிழக மீனவர்களுக்கு சிறை நீட்டிப்பு: குடும்பத்தினர் சோகம்!

கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 27 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடந்த 11ஆம் தேதி கைது செய்தனர். இலங்கையின் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுடைய சிறைக்காவல் வரும் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்த அவர்களுடைய குடும்பத்தினர், இந்த சிறை நீட்டிப்பால் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more