Short News

டிசம்பரில் இடைத்தேர்தல்: விரைவில் தேர்தல் ஆணையம் முடிவு!

டிசம்பரில் இடைத்தேர்தல்: விரைவில் தேர்தல் ஆணையம் முடிவு!

திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்ளிட்ட தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக வரும் டிசம்பர் மாதம் இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. இருப்பினும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் இறுதி தீர்ப்புக்கு பின்னர் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என சொல்லப்படுகிறது.
ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர் கைது!

ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர் கைது!

ஸ்டெர்லிங் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் குஜராத்தில் உள்ள ஆந்திர வங்கியில் இருந்து சுமார் ரூ.5,000 கோடி கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர் நிதின் ஜெயந்திலால் இன்று துபாயில் அமலாக்கப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே ஆந்திர வங்கியின் முன்னாள் இயக்குநர் அனூப் பிரகாஷ் கார்க் கைதாகியுள்ளார்
கழுகு-2 படத்தின் உரிமையை கைபற்றிய பிரபல நிறுவனம்!

கழுகு-2 படத்தின் உரிமையை கைபற்றிய பிரபல நிறுவனம்!

கிருஷ்ணா நடிக்கும் கழுகு-2 படத்தின் படபிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதியில் இந்த படத்தின் படபிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்க்ரீன் சீன் மீடியா வங்கியுள்ளது. இந்த தகவலை இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பிரபல ஹிரோவுக்கு மாமியாராகும் குஷ்பு!

பிரபல ஹிரோவுக்கு மாமியாராகும் குஷ்பு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு தொடர்ந்து புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு அடுத்ததாக நடிக்கிறார். தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாக இருக்கும் இந்த படத்தில் சிம்புக்கு மாமியார் வேடத்தில் குஷ்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more