Short News

1லட்சம் கனஅடி நீர் முக்கொம்பு தடுப்பணைக்குவரும் என எதிர்பார்ப்பு!

1லட்சம் கனஅடி நீர் முக்கொம்பு தடுப்பணைக்குவரும் என எதிர்பார்ப்பு!

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தலா 30,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது முக்கொம்பு தடுப்பணைக்கு 61,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்றிரவுக்குள் 1,00,000 கனஅடி நீர் முக்கொம்பிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
300 பேனர் வைத்து பெண் தோழியிடம் மன்னிப்பு கேட்ட தொழிலதிபர்!

300 பேனர் வைத்து பெண் தோழியிடம் மன்னிப்பு கேட்ட தொழிலதிபர்!

புனேவை சேர்ந்த 25 வயதான இளம் தொழிலதிபர் நிலேஷ் கெடேகர் தனது பெண் தோழியிடம் சமீபத்தில் சண்டை போட்டுள்ளார். இதற்காக வித்தியாசமான முறையில் புனேவின் முக்கிய சாலைகளில் 300 பேனர்களை வைத்து அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவர் பிரபலமாகியுள்ளார். மேலும், பொது இடத்தில் பேனர் வைத்ததற்காக புனே நகராட்சி நிர்வாகமும் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது
ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை கேரளாவுக்கு அனுப்பிய ஓபிஎஸ்!

ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை கேரளாவுக்கு அனுப்பிய ஓபிஎஸ்!

கேரள மழை வெள்ள நிவாரணத்திற்காக தேனி மாவட்டத்தில் இருந்து 30 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை 6 லாரிகளில் கொடியசைத்து அனுப்பி வைத்தார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம். முன்னதாக ஐந்து கோடி ரூபாய் கூடுதலாக கேரள அரசுக்கு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கேரளாவுக்கு தமிழக காங். சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவி!

கேரளாவுக்கு தமிழக காங். சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவி!

கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் கேரளா மாநிலமே தத்தளித்து வருகிறது. இந்நிலையில், கேரள வெள்ள பாதிப்புக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில் கேரளா வெள்ள பாதிப்புக்கு தமிழக காங். சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.  
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more