Short News

இறப்பிற்கு பின்னும் 14 மணி நேரம் போராடி வென்ற கலைஞர்!

இறப்பிற்கு பின்னும் 14 மணி நேரம் போராடி வென்ற கலைஞர்!

திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். தனது இறப்பிற்கு பின்னரும் 14 மணி நேரம் போராடி இட ஒதுக்கீட்டில் வெற்றி பெற்றுள்ளார் கருணாநிதி. மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய கருணாநிதிக்கு தடையாக இருந்த 5 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர இந்தியாவின் பாரம்பரிய உணவு பொருட்களும்  அவற்றின் எண்ணற்ற பயன்களும்..!

சுதந்திர இந்தியாவின் பாரம்பரிய உணவு பொருட்களும் அவற்றின் எண்ணற்ற பயன்களும்..!

ஒருவரின் உடல் ஆரோக்கியமும், வாழ் நாட்களும் அவர் உண்ணும் உணவை அடிப்படையாக வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இத்தகைய பெருமைமிக்க உணவு இன்று ஒரு மிக பெரிய வியாபாரமாக மாறி உள்ளது. ஆனால் நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இப்படிப்பட்ட வியாபார தன்மை இல்லை. அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ அவர்களின் உணவே பெரும் பங்கு வகித்தது.

சிறந்த மாநகராட்சியாக திருப்பூர் தேர்வு: தமிழக அரசு!

சிறந்த மாநகராட்சியாக திருப்பூர் தேர்வு: தமிழக அரசு!

உள்ளாட்சி அமைப்பில் சிறந்த மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் நகராட்சிகளில் சிறந்ததாக கோவில்பட்டி, கம்பம், சீர்காழி முறையே முதல் 3 இடங்களை பிடித்துள்ளதாக கூறியுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு 2% உள்ஒதுக்கீடு அடிப்படையில் வேலை: ஈபிஎஸ்!

விளையாட்டு வீரர்களுக்கு 2% உள்ஒதுக்கீடு அடிப்படையில் வேலை: ஈபிஎஸ்!

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு 2% உள்ஒதுக்கீடு அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முதலமைச்சர் விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு அல்லது அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more