Short News

வாக்கு எந்திரத்தில் முறைகேடு நடந்தால் வாக்குச்சீட்டு முறை- திமுக!

வாக்கு எந்திரத்தில் முறைகேடு நடந்தால் வாக்குச்சீட்டு முறை- திமுக!

டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்ற அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், "ஆண்டுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும், சட்டமன்ற தேர்தலில் தொகுதிவாரியாக தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும், வாக்கு எந்திரத்தில் முறைகேடு நடைபெற்றால், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் ஹெச்4 விசா விரைவில் ரத்து: இந்தியர்களுக்கு ஆபத்து!

அமெரிக்காவில் ஹெச்4 விசா விரைவில் ரத்து: இந்தியர்களுக்கு ஆபத்து!

அமெரிக்காவில் ஹெச்4 விசாவின் கீழ் 1.26 லட்சம் பேருக்கு அமெரிக்க குடியுரிமை அனுமதி வழங்கியுள்ளது. அவர்களில் 93 சதவிகிதம் பேர் இந்தியர்கள் ஆவர். இந்த நிலையில், ஹெச்4 விசாவை ரத்து செய்யும் புதிய சட்டம் ஒன்று இன்னும் 3 மாதங்களில் நிறைவேறும் என்று தெரிகிறது. இதையடுத்து, இவ்விசாவின் கீழ் பணிபுரியும் இந்தியர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிவகார்த்தியின் புதிய படம் 'ஜித்து ஜில்லாடி'?

சிவகார்த்தியின் புதிய படம் 'ஜித்து ஜில்லாடி'?

சிவகார்த்திகேயன்-நயன்தாரா மீண்டும் ஜோடியாக நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார் ராஜேஷ். வழக்கம்போல் முழுநீளக் காமெடிப் படமாகவே ராஜேஷ் எடுக்கவுள்ள இப்படத்தின் தலைப்பு 'ஜித்து ஜில்லாடி' என்று தகவல் கிளம்பியுள்ளது. ஆனால், படத்தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ள ராஜேஷ், இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று ட்வீட்டியுள்ளார்.
அதிகமாக முடி கொட்டுவதற்கு நீங்கள் தெரியாமல் செய்யும் இந்த செயல்கள்தான் காரணம்...!

அதிகமாக முடி கொட்டுவதற்கு நீங்கள் தெரியாமல் செய்யும் இந்த செயல்கள்தான் காரணம்...!

முடியின் அழகை பெரும்பாலும் நாம் ரசிப்பது உண்டு. பெண்கள் எப்படி தனது முடியை அடிக்கடி கோதி கொள்கிறார்களோ அதே போன்று ஆண்களும் தங்களது முடியை செய்வதும், பிடித்தமான ஒன்றாக கருதப்படுகிறது. முடியின் வளர்ச்சி மிக முக்கியமானதாக எப்போதும் கருதப்படுகிறது. அதிகமாக முடி கொட்டினால் அது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது. ஒரு சில முக்கிய செயல்கள் தான் நம் முடியை அதிகம் கொட்ட வைக்கிறது.

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more