Short News

ஏழைகளின் மருத்துவமனையாக மாறும் கலைஞரின் கோபாலபுரம் இல்லம்!

ஏழைகளின் மருத்துவமனையாக மாறும் கலைஞரின் கோபாலபுரம் இல்லம்!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தனது கோபாலபுரம் இல்லத்தை கடந்த 2010ம் ஆண்டு அஞ்சுகம் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கியுள்ளார். கருணாநிதியின் தாய் அஞ்சுகம் பெயரில் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த வீட்டை ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மருத்துவமனையாக மாற்ற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஆகஸ்ட் 8 முதல் 12 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தடை!

ஆகஸ்ட் 8 முதல் 12 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தடை!

மத்திய அரசு 66 பூச்சிகொல்லி மருந்துகள் பயன்பாடு தொடர்பாக கடந்த 2013ல் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 18 மருந்துகளை தடை செய்ய பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 12 பூச்சி கொல்லி மருந்துகளை பரிந்துரை செய்யப்பட்டது. அதன் படி அந்த பூச்சி கொல்லி மருந்துகள் வரும் ஆக.8 முதல் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
காபூலில் பயங்கர தாக்குதல்: 48 பேர் உயிரிழப்பு!

காபூலில் பயங்கர தாக்குதல்: 48 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் காபூலில் பள்ளி வகுப்பறையில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் 48 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்த 67 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கேரள பேரிடர்: இதுவரை 67 பேர் உயிரிழப்பு!

கேரள பேரிடர்: இதுவரை 67 பேர் உயிரிழப்பு!

கனமழை காரணமாக கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள கேரள மாநிலம். இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 67 பேர் உயிரிழந்தனர். வயநாடு, எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சிதைவை சந்தித்துள்ளது. மீட்பு பணியில் பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து தங்களது பணியை செய்து வருகின்றனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more