Short News

புதிய மாருதி பலேனோ காரின் வேரியண்ட் வாரியாக விலை விபரம்!

புதிய மாருதி பலேனோ காரின் வேரியண்ட் வாரியாக விலை விபரம்!

இந்திய பிரீமியம் ஹேட்ச்பேக் கார் சந்தையில் சிறந்த தேர்வாக உள்ள மாருதி பலேனோ கார் தோற்றத்தில் புதுப்பொலிவு மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு அண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தோற்றத்தில் மாறுதல்கள் மட்டுமின்றி, கூடுதல் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் வந்துள்ள இந்த கார் வாடிக்கையாளர்களை கவரும் அனைத்து அம்சங்களையும் பெற்றுள்ளது.
ஹூண்டாய் க்ரெட்டா, அல்காஸர் கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம

ஹூண்டாய் க்ரெட்டா, அல்காஸர் கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம

ஹூண்டாய் நிறுவனம் தனது பிரபலமான கிரெட்டா, கிரெட்டா எலெக்ட்ரிக் மற்றும் அல்காஸர் எஸ்யூவி மாடல்களின் புதிய லவுஞ்ச் எடிசன் (Lounge Edition) மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மூன்று கார்களின் விலை உயர்ந்த வேரியண்ட்டுகளின் அடிப்படையாகக் கொண்ட இந்த புதிய எடிஷன் மாடல்களில் தோற்றம், இன்டீரியர் மற்றும் பின்புற பயணிகளுக்கான பொழுதுபோக்கு வசதிகளில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
மடிக்கும் ஐபோனைவிட மாருதி ஆல்டோ கார் ரூ.12,000 விலை கம்மி?

மடிக்கும் ஐபோனைவிட மாருதி ஆல்டோ கார் ரூ.12,000 விலை கம்மி?

மடிக்கும் வசதியுடன் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் மாடலாக iPhone Duo அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலின் விலை கணிசமாக இருந்தாலும், தங்களது அந்தஸ்தை காட்ட நினைப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த தேர்வாக அமையும். இதன் 2TB ஸ்டோரேஜ் வசதிகொண்ட விலை உயர்ந்த வேரியண்ட்டிற்கு ரூ.ரூ.4,49,900 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எத்தனாலில் இயங்கும் வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்

எத்தனாலில் இயங்கும் வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்

இந்தியாவில் பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் E20 திட்டத்தின் இலக்கை நாடு எட்டியுள்ள நிலையில், அடுத்து E85 மற்றும் 100 சதவீத எத்தனாலில் இயங்கும் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் (Flex-Fuel) வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. டெல்லியில் நடைபெற்ற இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி மாநாட்டில் பங்கேற்ற பிரதமரின் ஆலோசகர் தருண் கபூர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.