Short News

கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்படவுள்ள இடத்தின் வரைப்படம்!

கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்படவுள்ள இடத்தின் வரைப்படம்!

திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் கதறி அழுதனர். இந்நிலையில், கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்படவுள்ள இடத்தின் திட்ட வரைப்படம் வெளியாகியுள்ளது. 
நீலகிரி மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை!

உதகை கிளன்மார்கன் அணையில் இருந்து இன்று மாலை 5 மணியளவில் நீர் திறக்கப்படுவதால் ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலர்கள் மற்றும் மீட்பு படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
9 மாவட்டங்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை!

9 மாவட்டங்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை!

கனமழையால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில்  நீர் திறப்பு அதிகரித்துள்ளது. இதனால் காவிரி கரையோர  9 மாவட்டங்களுக்கு  மத்திய நீர்வள  ஆணையம் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் உஷார் நிலையில்  இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர தின வாழ்த்து கூறிய முதல்வர் எடப்பாடி!

சுதந்திர தின வாழ்த்து கூறிய முதல்வர் எடப்பாடி!

நாளை இந்தியா 72வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இதனையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து கூறியுள்ளார். மேலும், பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க சாதி, மத வேற்றுமை மறந்து இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடன், அயராது உழைத்திட வேண்டுமென்றும் கூறியுள்ளார். மேலும், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகள் என கூறியுள்ளார். 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more