Short News

கல்லணையில் இருந்து கொள்ளிடத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்!

கல்லணையில் இருந்து கொள்ளிடத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்!

முக்கொம்பு மேலணையின் 9 மதகுகள் வெள்ளத்தில் உடைந்த நிலையில், கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 3,032 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதில் வெண்ணாற்றில் வினாடிக்கு 3,000 கனஅடியும், கல்லணை கால்வாயில் 3,406 கனஅடியும் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
குலு மணாலி வெள்ளத்தில் சிக்கிய கார்த்தி, படக் குழுவினர்!

குலு மணாலி வெள்ளத்தில் சிக்கிய கார்த்தி, படக் குழுவினர்!

கார்த்தி நடிக்கும் 'தேவ்' படத்தின் படப்பிடிப்பு, ஹிமாச்சலப் பிரதேசத்தின் குலு மணாலியில் நடந்து வந்தது. அப்போது பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த இயற்கைச் சீற்றத்தில் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் 140 பேரும் சிக்கிக் கொண்டனர். சில படப்பிடிப்பு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கார்த்தி உள்ளிட்ட அனைவருமே அங்கிருந்து வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
வேலூர் சிறையில் திருமுருகன் காந்தி திடீர் மயக்கம்!

வேலூர் சிறையில் திருமுருகன் காந்தி திடீர் மயக்கம்!

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்து மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு இன்று காலை வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஆகியவை ஏற்பட்டன. இதையடுத்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், திருமுருகன் காந்திக்கு சர்க்கரை மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
வாணி ஜெயராம் கணவர் மரணம்!

வாணி ஜெயராம் கணவர் மரணம்!

பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் கணவரான ஜெயராம் இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த ஜெயராம், இன்று மரணமடைந்தார். அவர் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட வாணி ஜெயராம், திருமணத்திற்குப் பின்னர் தன் பெயரின் பின்பாதியுடன் தன் கணவர் பெயரையும் இணைத்துக் கொண்டார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more