Short News

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் ராஜாஜி அரங்கம் வந்தது

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் ராஜாஜி அரங்கம் வந்தது

கருணாநிதி உடலை கொண்டு செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் ராஜாஜி அரங்கம் வந்தது. அவரது இறுதிஊர்வலம் இன்றைய தினம் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. அதுவரை கருணாநிதிக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரங்கத்தை சுற்றி பொதுமக்கள் அதிகமானதால் போலீசார் மேலும் குவிக்கப்பட்டுள்ளனர். 
கேரளாவுக்கு  ரூ.10 லட்சம் அளித்த பிரம்மாண்ட இயக்குனர்!

கேரளாவுக்கு ரூ.10 லட்சம் அளித்த பிரம்மாண்ட இயக்குனர்!

கனமழையால் கடும் இழப்பை சந்தித்துள்ள கேரள மாநிலத்திற்கு சினிமா பிரபலங்கள், மாநில முதல்வர்கள் தொடர்ந்து நிதியுதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் திரைப்பட இயக்குனர் சங்கர் கேரள மாநிலத்திற்கு நிவாரண தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். முன்னதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தரப்பில் நிதியுதவி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கேரள மக்களுக்கு கை கொடுத்த 'டாடா'!

கேரள மக்களுக்கு கை கொடுத்த 'டாடா'!

தொடர் கன மழையால் கேரள மாநிலமே உருக்கலைந்து போயுள்ளது. இந்த சூழ்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள டாடா கார்களை வீடு தேடிச்சென்று டோ செய்து சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லும் பணியை டாடா நிறுவனம் இலவசமாக வழங்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கேரளாவில் வெள்ள நீர் வடிந்த பின்பு இந்த நடவடிக்கையை டாடா நிறுவனம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு பின் 2 லட்சம் கன அடி நீர் திறப்பு!

12 ஆண்டுகளுக்கு பின் 2 லட்சம் கன அடி நீர் திறப்பு!

கர்நாடகவின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.95 லட்சம் கன அடியிலிருந்து 2.05 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இது 12 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையில் நீர் திறப்பு விநாடிக்கு 2 லட்சம் கன அடியை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் காவிரி கரையோர பகுதிகளுக்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more