Short News

விரைவில் தி.மு.க. தலைவர் ஆகிறார் ஸ்டாலின்!

விரைவில் தி.மு.க. தலைவர் ஆகிறார் ஸ்டாலின்!

தி.மு.க. தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து, அக்கட்சியின் புதிய தலைவராக ஸ்டாலினை நியமிப்பது குறித்து இப்போதே பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. தற்போது கட்சியின் செயல் தலைவராக உள்ள ஸ்டாலின், வரும் 19ஆம் தேதி நடக்கவுள்ள தி.மு.க. பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
60 ஆண்டுகளுக்கு பின் காதலனை மணக்கும் காதலி!

60 ஆண்டுகளுக்கு பின் காதலனை மணக்கும் காதலி!

லண்டனை சேர்ந்த ரான் ஓவன் (84) மற்றும் ரூத் ஹோல்ட் (79) ஆகிய இருவரும் 1950 ஆம் ஆண்டு காதலர்களாக இருந்துள்ளனர். ரான் ஓவன் இசை மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் இருவரும் பிரிந்து சென்றுள்ளனர். ரூத் வேறு ஒரு ஆணை திருமணம் செய்து கொண்டு பின்னர் சில ஆண்டுகளில் விவகாரத்து செய்துள்ளார். தற்போது பழைய காதல் மீண்டும் மலர்ந்துள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விருக்கின்றனர். 
கேரள வெள்ள நிதியை தொழிலுக்கு பயன்படுத்தியதா பேடிஎம்?

கேரள வெள்ள நிதியை தொழிலுக்கு பயன்படுத்தியதா பேடிஎம்?

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால், கேரளாவில் கனமழை பெய்தது. இதனால் வரலாறு காணாத வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350க்கும் மேற்பேட்டோர் இறந்துள்ளனர்.

மேலும், 10 லட்சம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏராளமானோர் கேரளாவுக்கு நிதி உதவியை வாரி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பேடிஎம் நிறுவனர் வழங்கிய நிதி உதவி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் 500முறை திருடிய 'கில்லாடி' தம்பதியர் கைது!

ரயிலில் 500முறை திருடிய 'கில்லாடி' தம்பதியர் கைது!

பீஹார், ஜார்கண்ட் மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கில்லாடி தம்பதியினரை ஜபல்பூர் ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில் இவர்கள் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ரயில் பயணிகளிடம் நட்பாக பேசுவது போல், நைஸாக பேசி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more