Short News

வாரிசு என்பதால் ஸ்டாலின் தலைவராகவில்லை- தமிழிசை!

வாரிசு என்பதால் ஸ்டாலின் தலைவராகவில்லை- தமிழிசை!

பாளையங்கோட்டையில் திமுக தலைவர் கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "சென்னையில் நடைபெறும் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக பிரதிநிதிகளில் ஒருவர் கண்டிப்பாக பங்கேற்பார்" என்றார் மேலும், கருணாநிதி வாரிசு மகன் என்பதால் மட்டுமே ஸ்டாலின் பதவிக்குவரவில்லை, அடிப்படை தொண்டனாக இருந்து பதவிக்கு வந்தவர் ஸ்டாலின், என்று கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 174 ரன்கள்!

இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 174 ரன்கள்!

துபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றின் இந்தியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் வங்கதேசம் 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 173 ரன்களில் சுருண்டது. இதில், அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், பும்ரா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
ரவிக்கு ஜோடியாகும் காஜல்!

ரவிக்கு ஜோடியாகும் காஜல்!

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார், அடங்க மறு படத்தை தொடர்ந்து தனிஒருவன் -2 படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் படத்திலும் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் நடிக்கிறார்.
என் உயிருக்கு ஆபத்து: நிரவ் மோடியின் உறவினர் மனு!

என் உயிருக்கு ஆபத்து: நிரவ் மோடியின் உறவினர் மனு!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவர் நிரவ் மோடி. இவருடைய உறவினர் மெஹுல் சோக்சி இந்தியாவில் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டை ரத்து செய்யும்படி டெல்லி சி.பி.ஐ., கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more