Short News

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று மாலை 6 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-33; மதுரை-31; கோயம்புத்தூர்-29; திருச்சி-30; திருநெல்வேலி-32; திண்டுக்கல்-33; ஈரோடு-34; சேலம்-34; சிவகாசி-31; தஞ்சாவூர்-36; தூத்துக்குடி-31; திருப்பூர்-32; வேலூர்-33; ஊட்டி-16; கொடைக்கானல்-14; ஏற்காடு-25; ஏலகிரி-29; வேடந்தாங்கல்-30.
162 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்!

162 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்!

ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி உச்சக்கட்ட பரபரப்பில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் பாகிஸ்தான் அணி, 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 169 ரன்களில் சுருண்டது. இதில் இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் மற்றும் கெதர் ஜாதவ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
பாகிஸ்தானை துவம்சம் செய்து வரும் இந்தியா: PAK 162/9 (43)!

பாகிஸ்தானை துவம்சம் செய்து வரும் இந்தியா: PAK 162/9 (43)!

ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி உச்சக்கட்ட பரபரப்பில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் பாகிஸ்தான் அணி, 43 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.
தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு தடை!

தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு தடை!

புஷ்கரம் விழாவிற்கு சுவாமி எழுந்தருளுவது ஆகம விதிகளுக்கு மாறானது என்றுக்கூறி தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. கோவில் பழக்க வழக்கத்திற்கு எதிராக புஷ்கரம் விழா நடத்தக்கூடாது, பருவமழை காலத்தில் ஆற்றில் அதிகம் தண்ணீர் செல்லும் போது நீராடுபவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது சிரமம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more