Short News

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 26,000 கன அடியிலிருந்து 28,000 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 120.04 அடி; நீர் இருப்பு 93.53 டி.எம்.சி. ஆகும். பாசன வசதிக்காக அணையிலிருந்து நொடிக்கு 27,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. கிழக்கு கால்வாய் பாசனத்திற்காக அணையிலிருந்து நொடிக்கு 800 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
பியாவுக்கு மகத் கொடுத்த லிப் டூ லிப் முத்தம்!

பியாவுக்கு மகத் கொடுத்த லிப் டூ லிப் முத்தம்!

சமீபத்தில் பிக் பாஸ்-2 வீட்டில் இருந்து வெளியேறிய மகத் தற்போது சிம்புவுடன் சேர்ந்து ஊரைச்சுற்றி வருகிறார். இதில் யாஷிகாவுடன் காதல் என்று சொல்லி பிக் பாஸ் வீட்டில் அவர் செய்த அந்தரங்க அட்டகாசத்தை அவ்வளவு சீக்கரம் யாரும் மறந்திருக்க முடியாது. இந்த சூழ்நிலையில், பேக் பெஞ்ச் ஸ்டூடண்ட்  படத்தில் நடிகை பியா பாஜ்பாய்க்கு மகத் கொடுத்த லிப் டூ லிப் முத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
சின்னத்திரைக்கு வரும் விஷால்!

சின்னத்திரைக்கு வரும் விஷால்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஷால் தற்போது சின்னத்திரைக்கு வரவுள்ளார். சரத்குமார், கமல், சூர்யாவை தொடர்ந்து தற்போது இவரும் ஒரு ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு 'விதைத்தவன் தூங்கலாம் விதைகள் தூங்காது' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நடத்த விஷாலுக்கு பல கோடி சம்பளம் எனவும் கூறப்படுகிறது. 
முத்தலாக் ஒரு குற்றம்: அவசர சட்டம் பிறப்பிப்பு

முத்தலாக் ஒரு குற்றம்: அவசர சட்டம் பிறப்பிப்பு

முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை முஸ்லீம் சமூகத்தில் இருந்து வருகிறது. இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், முத்தலாக் செய்வது ஒரு குற்றச் செயல் என வரையறுக்கும் அவசர சட்டத்திற்கு மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி உள்ளது. ஆனால், ராஜ்யசபாவில் காங்கிரஸ் எதிர்ப்பால் சட்ட மசோதா நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more