Short News

இடைத்தேர்தலில் போட்டி: அறிவித்தார் தினகரன்!

இடைத்தேர்தலில் போட்டி: அறிவித்தார் தினகரன்!

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் என அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேசிய தினகரன் இதனைத்தெரிவித்தார்.
3ஆவது டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா!

3ஆவது டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா!

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் நடைபெறும் 3ஆவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இந்தியா வலுவான நிலையில் உள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 329 ரன்கள் குவித்த நிலையில், இங்கிலாந்தோ 161 ரன்களில் சுருண்டது. ஹர்திக் பாண்டியாவின் அபார பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் அடங்கி விட்டனர். இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா, 2ஆவது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது.
கருணாநிதி சமாதியில் விஜயகாந்த் அஞ்சலி!

கருணாநிதி சமாதியில் விஜயகாந்த் அஞ்சலி!

தி.மு.க. தலைவர் மறைந்த கருணாநிதியின் சமாதியில் இன்று அதிகாலை அஞ்சலி செலுத்தினார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். சிகிச்சைக்காக அமெரிக்காவிற்குச் சென்றிருந்த விஜயகாந்த், இன்று சென்னை திரும்பிய நிலையில் நேரடியாக மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதிக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடைய திருமணத்தை கருணாநிதிதான் நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீர்மூழ்கியிலிருந்து அணு ஆயுத ஏவுகணை சோதனை: இந்தியா சாதனை!

நீர்மூழ்கியிலிருந்து அணு ஆயுத ஏவுகணை சோதனை: இந்தியா சாதனை!

நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கவல்ல அதிநவீன ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி சோதித்துள்ளது இந்தியா. கடந்த 11 மற்றும் 12ஆம் தேதிகளில் ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பல் மூலம், கடலுக்கடியில் 20 மீட்டர் ஆழத்திலிருந்து இந்த சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்தத் திறன் படைத்த நாடுகளில் இந்தியாவும் 6ஆவது நாடாக இணைந்துள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more