Short News

கேரள வெள்ளம்: ரூ.7 கோடி நிதி அளிக்கும் ஆப்பிள்!

கேரள வெள்ளம்: ரூ.7 கோடி நிதி அளிக்கும் ஆப்பிள்!

வரலாறு காணாத மழை-வெள்ளத்தில் சிக்கி பெரும் பேரழிவை சந்தித்துள்ளது கேரள மாநிலம். அங்கு நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்காக ஆப்பிள் நிறுவனம் ரூ.7 கோடி நிவாரண உதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. 'மெர்சி கார்ப்ஸ்' என்ற அமைப்பின் மூலம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு இத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொகரம் பண்டியையை முன்னிட்டு சென்னையில் பேரணி!

மொகரம் பண்டியையை முன்னிட்டு சென்னையில் பேரணி!

மொகரம் பண்டிகையை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை ஜானி ஜான்கான் சாலையில் இருந்து திருவல்லிக்கேணி வரை நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பேரணியாக சென்றனர். பேரணி செல்லும் பாதையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, காவல்துறையினர், போக்குவரத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தங்கம் விலை உயர்வு!

தங்கம் விலை உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட இன்று ஒரு கிராமுக்கு ரூ.6 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் தற்போது ஒரு கிராமுக்கு ரூ.2,935 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,480 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,820க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.40.10 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.40,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சிவகங்கையில் மொகரம் கொண்டாடிய இந்துக்கள்!

சிவகங்கையில் மொகரம் கொண்டாடிய இந்துக்கள்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மொகரத்தையொட்டி பள்ளிவாசல்முன் இந்துக்கள் தீக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மதநல்லிணக்கத்துக்கு அடையாளமாக முதுவன்திடலில் உள்ள பள்ளிவாசல் முன் நூற்றுக்கும் மேற்பட்ட இந்துக்கள் நேர்த்திக்கடன் செலுத்தி, தங்களது இஸ்லாமிய தோழர்களுக்கு மொகரம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more