Short News

கேரள வெள்ளம்: ரூ.4.2 கோடி வழங்கிய பில் கேட்ஸ்!

கேரள வெள்ளம்: ரூ.4.2 கோடி வழங்கிய பில் கேட்ஸ்!

கேரள வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக மைக்ரோசாஃப்ட் அதிபர் பில் கேட்ஸ் ரூ.4.2 கோடி தொகையை அளித்துள்ளார். பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேசன் என்ற அறக்கட்டளை மூலம் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கேரளாவின் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள யூனிசெஃப் அமைப்பிற்கு இந்தத் தொகையை அனுப்பி வைத்துள்ளார் பில் கேட்ஸ்.
'செக்கச் சிவந்த வானம்"  படத்திற்கு தடையா?

'செக்கச் சிவந்த வானம்" படத்திற்கு தடையா?

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமான `செக்கச் சிவந்த வானம்' இந்த மாதம் 27ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த படத்தை சமீபத்தில் பார்த்த தனிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆனால், இந்த படத்திற்கு விலங்குகள் நல வாரியம், தடையில்லா சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. சில காட்சிகளில் நாய்களை வைத்து படமாக்கப்பட்டுள்ளதால் சான்றிதழ் விலங்குகள் நல வாரியம் மறுத்துள்ளது.
குளிர்காலத்தில் தம்பதியர்கள் கலவி கொண்டால் நடக்கும் நன்மை அறிவீரா?

குளிர்காலத்தில் தம்பதியர்கள் கலவி கொண்டால் நடக்கும் நன்மை அறிவீரா?

ஒல்லியான குழந்தைகள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் குறைபாட்டினால் பிறக்கின்றனர்; தம்பதியர் மேற்கொள்ளும் பழக்கங்கள் தான் அவர்கள் கருத்தரிப்பை எட்டும் பொழுது, குழந்தையின் நலத்தை தீர்மானிக்கும். இந்த பதிப்பில் குளிர்காலத்தில் தம்பதியர்கள் கலவி கொண்டால் நடக்கும் நன்மை மற்றும் ஒல்லியான குழந்தைகள் பிறக்க தம்பதியர்கள் குளிர்காலத்தில் கலவி கொள்வது தான் காரணமா என்று படித்து அறியலாம்.

நான் ஒருமையில் பேசியது தவறுதான்- 'ஜகா' வங்கிய கருணாஸ்!

நான் ஒருமையில் பேசியது தவறுதான்- 'ஜகா' வங்கிய கருணாஸ்!

தான் தலைமறைவானதாக வெளியான தகவலுக்கு எம்.எல்.ஏவும் நடிகருமான கருணாஸ் மறுப்பு தெரிவித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ஆர்ப்பாட்டத்தில் ஏதேனும் தவறுதலாக பேசியிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன், ஆனால் தவறு செய்யும் அதிகாரிகளை தண்டிக்காதது ஏன்?,  எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான்" என்றார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more