Short News

4500 எம்ஏஹெச் பேட்டரியில் இன்ஃபினிக்ஸ் நோட் -5 ரிலீஸ்!

4500 எம்ஏஹெச் பேட்டரியில் இன்ஃபினிக்ஸ் நோட் -5 ரிலீஸ்!

இன்ஃபினிக்ஸ் மொபிலிட்டி ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான நோட் 5 என்ற போனினை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. ஹீலியோ P23 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா உள்ளிட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ரூ.11,999 என்ற விலையில் இந்த போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நைட்டியுடன் செய்தியாளர்களுடன் நடிகை வனிதா சண்டை!

நைட்டியுடன் செய்தியாளர்களுடன் நடிகை வனிதா சண்டை!

தனது மகள் வனிதா மீது மதுரவாயல் காவல் நிலையத்தில் நடிகர் விஜயகுமார் புகார் செய்துள்ளார். அதில், என்னுடைய மனைவி மஞ்சுளாவுக்கு சொந்தமான வீட்டை லீசுக்கு கொடுத்துள்ளேன். ஆனால் வீட்டுக்குள் நுழைந்த வனிதா, அங்கிருந்து வெளியில் செல்ல மறுக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். இதையறிந்த செய்தியாளர்கள் அங்கே செய்தி சேகரிக்க சென்ற போது, நைட்டியுடன் இருந்த வனிதா அவர்களுடன் தகராறு செய்துள்ளார்.
வைரலாகும் சமந்தாவின்  'யூ டர்ன்' சவால் !

வைரலாகும் சமந்தாவின் 'யூ டர்ன்' சவால் !

பவன் குமார் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்த யூ- டர்ன் திரைப்படம் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியிருந்ததால், படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தை விளம்பரப்படுத்த யூ- டர்ன் சவால் என்ற பெயரில் சமந்தா நடனம் ஆடும் வீடியோ சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதைப்பார்த்த குழந்தைகள், பெண்கள் பதிலுக்கு நடனமாடி இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
5 பேரின் தூக்கு ரத்து: ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

5 பேரின் தூக்கு ரத்து: ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

திருவண்ணாமலை போளூரில் 2000ல் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தொழில்போட்டி காரணமாக கள்ளச்சாராயத்தில் விஷம் கலந்ததால் 13 பேர் உயிரிழந்ததாக தெரியவந்த நிலையில், இந்த வழக்கில் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more