Short News

தள்ளுபடி விலையில் JBL ஹெட்போன்!

தள்ளுபடி விலையில் JBL ஹெட்போன்!

இந்தியாவில் ஜெ.பி.எல். சாதனங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் புதிய வலைதளம் துவங்கப்பட்டுள்ளது. தற்போது ஜெ.பி.எல். சாதனங்கள் தள்ளுபடி விற்பனையில் வந்துள்ளது. இது ஆகஸ்ட் 7 ல் இருந்து 4 நாட்களுக்கு சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 50% வரை தள்ளுபடி பெற முடியும். சிறப்பு விற்பனையின் கீழ் அனைத்து சாதனங்களுக்கும் ஒரு ஆண்டு கூடுதல் வாரண்டி வழங்கப்படுகிறது. 
329 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி!

329 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இந்திய கேப்டன் கோலி 97 ரன்களும், ரகானே 81 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், பிராட், வோக்ஸ் உள்ளிட்ட பந்து வீச்சாளர்கள் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
'சீதக்காதி' ரிலீஸ் தேதி!

'சீதக்காதி' ரிலீஸ் தேதி!

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை தொடர்ந்து பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் 2வது முறையாக விஜய் சேதுபதி நடித்து வரும் படம் 'சீதக்காதி'. இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயது முதியவராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதல்முறையாக அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த படத்தை அக்டோபர் 5ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அடுத்த மார்ச்சில் புதிய நடிகர் சங்க கட்டிடம் திறப்பு!

அடுத்த மார்ச்சில் புதிய நடிகர் சங்க கட்டிடம் திறப்பு!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65வது பொதுக்குழு கூட்டம் சங்க பொதுச்செயலாளர் விஷால் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், தென்னிந்திய சங்க தேர்தல் தள்ளிப்போனாலும் நடிகர் கார்த்தியே சங்க பொருளாளராக தொடர்வார் என பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நடிகர் சங்க கட்டிடம் 2019 மார்ச் மாதம் திறக்கப்படும் என விஷால் தெரிவித்துள்ளார்
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more