Short News

நாசா படம்பிடித்த 'பென்னு’ விண்கல்

நாசா படம்பிடித்த 'பென்னு’ விண்கல்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தனது ஆசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம் மூலம் 'பென்னு' விண்கல்லை படம் பிடித்துள்ளது. இந்த விண்கல் பாலிகேம் கேமரா மூலம் 1.4 மில்லியன் மைல் தொலைவில் இருந்து படம் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரு மணி நேரத்தில் பென்னு' தொடர்பாக 5 படங்களை எடுத்து அனுப்பப்பட்டுள்ளது. இதன் அளவு, சுற்றுப்புறம் உள்ளிட்ட தகவல் சில மாதங்களில் வெளியிடப்படும் என நாசா அறிவித்துள்ளது
சாதாரண விமானத்தில்தான் பயணிப்பேன்: புதிய மெக்ஸிகோ அதிபர் அசத்தல்!

சாதாரண விமானத்தில்தான் பயணிப்பேன்: புதிய மெக்ஸிகோ அதிபர் அசத்தல்!

மெக்ஸிகோவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மானுவல் லோபஸ் ஒபராடோ, வரும் டிசம்பர் மாதத்தில் பதவியேற்க உள்ளார். அதிபருக்கான தனி விமானத்தை விற்க முடிவு செய்துள்ள அவர், இனி பயணிகள் விமானத்தில் மட்டுமே பயணிப்பேன் என அதிரடியாகக் கூறியுள்ளார். சமீபத்தில் கனமழை காரணமாக, ஒரு பயணிகள் விமானத்தில் 3 மணி நேரம் வரை அவர் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி பணமே பரிசு: இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு!

இனி பணமே பரிசு: இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு!

இந்திய ஒலிம்பிக் சங்கம் இதுவரை பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசுப் பணம் அளிக்காமல், வெறும் பாராட்டுக்களை மட்டுமே அளித்து வந்துள்ளது. இந்த நிலையில் தன் வரலாற்றில் முதல் முறையாக, பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசுப் பணம் அளிக்க அது முடிவு எடுத்துள்ளது. தங்கப் பதக்கத்திற்கு ரூ.5 லட்சமும், வெள்ளிக்கு ரூ.3 லட்சமும், வெண்கலத்திற்கு ரூ.2 லட்சமும் வழங்க இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவெடுத்துள்ளது.
உ.பி.யில் மர்மக் காய்ச்சல்: 6 வாரங்களில் 79 பேர் பலி!

உ.பி.யில் மர்மக் காய்ச்சல்: 6 வாரங்களில் 79 பேர் பலி!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வெகுவேகமாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர். கடந்த 6 வாரங்களில் மட்டும் இந்த மர்மக் காய்ச்சலுக்கு 79 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, மா நிலம் முழுவதும் மருத்துவமனைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது எந்த வகையான காய்ச்சல் என்பதைக் கண்டறிய 3-டாக்டர்கள் கொண்ட தனிக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more