Short News

சூரியனை ஆராய விண்ணில் பறக்கும் பார்க்கர்!

சூரியனை ஆராய விண்ணில் பறக்கும் பார்க்கர்!

சூரியனின் சுற்றுப்புறத்தை ஆராய்ச்சி செய்வதற்காக பாக்கர் என்ற விண்கலத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பி வைக்க உள்ளது. இன்று கிளம்பவிருந்த நிலையில், பார்க்கரின் பயணம் 24 மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்டா 4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய உள்ளது பார்க்கர். சூரியனுக்கு 61 லட்சம் கி.மீ. தொலைவிலிருந்து அதை பார்க்கர் ஆராய உள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு!

சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று முதல் சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, மேலும், 15,000 போலீஸார் பணியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை கமிஷனர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு ரூ.750 கோடி இழப்பீடு: ஐகோர்ட் நோட்டீஸ்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு ரூ.750 கோடி இழப்பீடு: ஐகோர்ட் நோட்டீஸ்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை ரூ.750 கோடி இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 கோடி வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆண்மை குறைபாட்டை போக்கும் தொட்டாற்சுருங்கி!

ஆண்மை குறைபாட்டை போக்கும் தொட்டாற்சுருங்கி!

ஆண்மை குறைபாடுகளுக்கு தொட்டாற்சுருங்கி மிகவும் பயன் உள்ளதாக கருத படுகிறது.அதிகமான வெப்பத்தினால் ஏற்படும் கோளாறுகள் அனைத்தும் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.சருமத்தில் ஏற்படும் கோளாறுகள் அனைத்தையும் போக்கும் விதத்தில் பயன்படுகிறது. மேலும், அனைத்து வலிகளுக்கும் நல்ல நிவாரணியாகவும் பயன்படுகிறது.  
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more