Short News

கியா சொரென்டோ 7 சீட்டர் எஸ்யூவிக்கு புக்கிங் துவங்கியது!

கியா சொரென்டோ 7 சீட்டர் எஸ்யூவிக்கு புக்கிங் துவங்கியது!

கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் ஹைப்ரிட் எஸ்யூவியை மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதை அதிகாரப்பூர்வமாக இன்று உறுதி செய்துள்ளது. 7 பேர் செல்லும் இருக்கை வசதி கொண்ட இந்த புதிய மாடலின் டீசரை இன்று கியா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளதுடன், இந்தியாவில் புக்கிங்கையும் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது.
விற்பனையில் இந்தியாவின் டாப்-10 கார் நிறுவனங்கள்

விற்பனையில் இந்தியாவின் டாப்-10 கார் நிறுவனங்கள்

நாட்டின் கார் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஜூலையில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. கடந்த மாதம் மட்டும் 4.7 லட்சம் பயணிகள் வாகனங்கள் டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, 33 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. வழக்கம்போல் மாருதி சுஸுகி கார் நிறுவனம் மிகப்பெரிய வித்தியாசத்துடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
புதிய ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் அறிமுகம்!

புதிய ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் அறிமுகம்!

வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில்கொண்டு எளிதாக சார்ஜ் செய்யும் வசதியுடன் விடா விஎக்ஸ்2 எலெக்ட்ரி ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட்டை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பேட்டரியை கழற்றி தூக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாத வீட்டு சார்ஜர் வசதியுடன் வந்துள்ள இந்த புதிய வேரியண்ட்டிற்கு ரூ.1.13 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
E20 Petrol: லிட்டருக்கு ரூ.30 வரை மிச்சமா? அரசு விளக்கம்

E20 Petrol: லிட்டருக்கு ரூ.30 வரை மிச்சமா? அரசு விளக்கம்

E20 பெட்ரோல் பயன்படுத்தப்படுவதால் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு லிட்டருக்கும் 30 ரூபாய் வரை மிச்சம் ஏற்படுவதாக மத்திய அரசு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. நாடுமுழுவதும் பெரும்பான்மையான பெட்ரோல் நிலையங்களில் E20 பெட்ரோல்தான் பிரதானமாக விற்பனை செய்யப்படுகிறது.