Short News

இனி "பிலைட் மோடு" கிடையாது.! 30000 அடிக்குமேல் மொபைல் உபயோகிக்கலாம்.!

இனி "பிலைட் மோடு" கிடையாது.! 30000 அடிக்குமேல் மொபைல் உபயோகிக்கலாம்.!

மிக விரைவில் உங்கள் விமான பயணத்தின் போது வாய்ஸ் கால்ஸ் மற்றும் இணையம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று ஒரு புதிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வானில் 30,000 அடிக்கு மேல் பறக்கும் பொழுதும் உங்களின் மொபைல் போன்களை பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களின் விமான பயணத்தின் பொது "இன்-பிலைட்(In-Flight)" சேவை மற்றும் இன்டர்நெட் சேவை வழங்கப்படுமென்று டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே இரண்டாவது மோசமான வங்கிகள் இந்திய வங்கிகள் - ப்ளூம்பெர்க் காரசாரம்.!

உலகிலேயே இரண்டாவது மோசமான வங்கிகள் இந்திய வங்கிகள் - ப்ளூம்பெர்க் காரசாரம்.!

அப்போது முதல் இடம் யார் என்று கேட்கிறீர்களா...? இத்தாலி. வங்கிகளின் பேலன்ஸ் ஷீட்டில் இருக்கும் வாராக் கடன்கள், பிரச்னைக்குரிய கடன்களை கணக்கில் எடுத்துக் கொண்டு இதைக் கணக்கிட்டு இருக்கிறார்கள்.ஒரு வங்கியின் முதல் அடிப்படைப் பணியே, தேவையானவர்களுக்குக் கடன் கொடுத்து அதை வட்டியோடு ஒழுங்காக வசூலிப்பது. இந்த விஷயத்தில் இந்திய வங்கிகளைப் பற்றி நாம் அதிகம் பேச வேண்டியதில்லை.

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 10 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-29; மதுரை-30; கோயம்புத்தூர்-27; திருச்சி-31; திருநெல்வேலி-30; திண்டுக்கல்-27; ஈரோடு-26; சேலம்-26; சிவகாசி-31; தஞ்சாவூர்-31; தூத்துக்குடி-30; திருப்பூர்-26; வேலூர்-29; ஊட்டி-15; கொடைக்கானல்-17; ஏற்காடு-21; ஏலகிரி-25; வேடந்தாங்கல்-29.
30 ஜெட் ஏர்வேஸ் பயணிகளுக்கு காது-மூக்கில் திடீர் ரத்தக் கசிவு!

30 ஜெட் ஏர்வேஸ் பயணிகளுக்கு காது-மூக்கில் திடீர் ரத்தக் கசிவு!

இன்று காலை மும்பையிலிருந்து ஜெய்ப்பூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் 166 பேர் பயணித்தனர். அவர்களில் 30 பேரின் காது மற்றும் மூக்கிலிருந்து திடீர் ரத்தக் கசிவு ஏற்பட்டது; சிலர் தலைவலியாலும் அவதிப்பட்டனர். விமானத்தில் காற்றழுத்தம் பரிசோதிக்கப்படாததே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவ்விமானம் உடனடியாக மும்பை விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டது. அங்கு பயணிகள் சிகிச்சை பெற்றனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more