Short News

ரெட்மி நோட் 6 ப்ரோ லீக்!

ரெட்மி நோட் 6 ப்ரோ லீக்!

போன் பிரியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சியோமியின் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் தகவல்கள் இணையத்தளங்களில் இன்று லீக் ஆகியுள்ளது. இந்த போனின் சிறப்பம்சங்கள் மற்றும் தகவல்கள் பென்ச்மார்க்கிங் வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போனில் இன்ச் நாட்ச் டிஸ்ப்ளே, 4000 எம்.ஏ.ஹெச்.பேட்டரி மற்றும் 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
வாய்வழியாக நெருப்புவிட்ட மாணவன் பலி!

வாய்வழியாக நெருப்புவிட்ட மாணவன் பலி!

காஞ்சிபுரம் மாவட்டம் ஊரம்பாக்கத்தில் வாய்வழியாக நெருப்புவிடும் பயிற்சியில் ஈடுபட்ட 10ம் வகுப்பு மாணவன் ஜெபின் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்த போது உடலில் தீ்ப்பற்றியதில் ஜெபின் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜயபாஸ்கர் வழக்கு தொடரவில்லை: ஸ்டாலின்!

விஜயபாஸ்கர் வழக்கு தொடரவில்லை: ஸ்டாலின்!

காற்றாலை மின்சார கொள்முதல் ஊழல் புகாரில் அமைச்சர் தங்கமணி தெளிவாக பதிலளிக்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் குட்கா விவகாரத்தில் வழக்கு தொடர்வதாக கூறிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதுவரை வழக்கு தொடராரது எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
உணவில் சாதாரண உப்புக்கு பதிலாக இந்துப்பு பயன்படுத்தலாமா? சாப்பிட்டால் என்ன ஆகும்?

உணவில் சாதாரண உப்புக்கு பதிலாக இந்துப்பு பயன்படுத்தலாமா? சாப்பிட்டால் என்ன ஆகும்?

உணவுகளில் உள்ள அறுசுவைகளில் உப்பின் சுவையும் மிக முக்கியமானது. உணவில் நாம் சேர்க்கும் உப்பு தான் உணவிற்கே சுவையூட்டுகிறது. அப்படி சேர்க்கப்படும் உப்பு வெறும் சுவையை மட்டும் தருவதோடு பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது என்பது உண்மை. எனவே தான் இந்த ஆரோக்கிய நன்மைகள் முழுமையாக கிடைக்க சிறிதளவு இமாலய உப்பை சேர்த்தாலே போதும். ஏனெனில் மற்ற உப்புகளை விட

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more