ஏப்1 முதல் இந்த கார்களின் விலை தாறுமாறா ஏறப்போகுது!

மார்பதி சுசுகி இந்தியா ஏப்ரல் 2025ல் கார் விலையை 4% வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த உயர்வு இந்தியா முழுவதும் அரினா மற்றும் நெக்ஸா மாதிரிகளை பாதிக்கும்.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் ஆக்டா கார் இந்தியாவில் அறிமுகம்!!

ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover), உலகளவில் பிரபலமான எஸ்யூவி கார் (SUV Car) நிறுவனம். கம்பீரமான மற்றும் விலையுயர்ந்த எஸ்யூவி கார்களை உருவாக்குவதில் கைத்தேர்ந்த நிறுவனமாக ஜாகுவார் லேண்ட் ரோவர் விளங்குகிறது. ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனங்களின் கூட்டணி நிறுவனம் தான் ஜாகுவார் லேண்ட் ரோவர் என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இவை இரண்டுமே கூட்டணியில் இருந்தாலும், உற்பத்தி செய்யும் கார்களை தனித்தனி பிராண்ட்களில் விற்பனை செய்கின்றன. அந்த வகையில், லேண்ட் ரோவரில் இருந்து பல்வேறு விதமான கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

எவ்ளோ கிமீ ஓடி இருந்தாலும் வேணாம்னா ரிட்டர்ன் பண்ணிக்கலாம்!

வாடிக்கையாளர்களைக் கவர சிறப்பு சலுகைகளை வாகன உற்பத்தியாளர்கள் அறிவிப்பது ஒன்றும் புதிதல்ல, அது வழக்கமான ஒன்றே. ஆனால், சமீப காலமாக ஒரு சில வாகன உற்பத்தியாளர்கள் யாரும் நம்ப முடியாத மற்றும் இதுவரை யாரும் பார்த்திராத ஆஃபர்களையும், திட்டங்களையும் அறிவித்து வருகின்றனர். அந்த மாதிரியான ஓர் அறிவிப்பை பற்றியே தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான கைனடிக் கிரீன் (Kinetic Green), இதுவே அந்த யாரும் இதுவரை கண்டிராத திட்டத்தை அறிவித்து இருக்கும் நிறுவனம் ஆகும்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 500சிசி+ பைக்குகள்!!

உலகளவில் மிக பெரும் மோட்டார்சைக்கிள் சந்தை என்றால், அது நம் இந்தியா என்று சொன்னால் அது மிகையில்லை. ஆனால் அதேநேரம், நம் நாட்டில் விலை குறைவான பைக்குகளை வாங்கவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஏனெனில், அவ்வாறான பொருளாதார சூழலே நம் நாட்டில் நிலவுகிறது. 500சிசி-க்கு மேல் பவர்ஃபுல்லான மற்றும் விலைமிக்க பைக்குகளை வாங்கக்கூடிய கஸ்டமர்கள் இந்த பரந்து விரிந்த நாட்டில் குறைவாகவே உள்ளனர். அதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 500சிசி பைக்குகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

30 லட்ச ரூபாயில் புது டொயோட்டா கார் வாங்கிய தயாரிப்பாளர்!!

டொயோட்டா இன்னோவா (Toyota Innova) கார்களுக்கு நம் நாட்டில் கடந்த பல வருடங்களாக நல்ல டிமாண்ட் இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் இன்னோவா காரை பிடிக்காதவர்களே மிகவும் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இதன் காரணமாகவே, உலகளவில் பிரபலமான ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டா இந்தியாவில் அவ்வப்போது இன்னோவா கார்களை அப்டேட் செய்து விடுகிறது. அதேபோல், புது புது இன்னோவா கார்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. ஆரம்பத்தில் இன்னோவா என்று இருந்த நிலையில், அதன்பின் 'இன்னோவா கிரிஸ்ட்டா' என மாறியது.

கையில காசு இருந்தா இதுல ஒரு காரை இப்பவே வாங்கி போடுங்க!

இந்தியாவில் ரூ. 25 லட்சத்திற்கு கீழ் உள்ள சிறந்த டீசல் ஆட்டோமேடிக் எஸ்யூவிகளை கண்டறியவும். முக்கிய மாடல்கள் டாட்டா நெக்ஸான், மகிந்திரா எக்ஸ்யூவி700, கிஅ சோனெட் ஆகியவை அடங்கும்.

வெறும் 6 லட்சத்துக்கு 7 பேர் போற காரா!

ஜப்பானை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று நிஸான் (Nissan). இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் நிஸான் நிறுவனம் 2 கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. அவை நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail) ஆகியவை ஆகும். ஆனால் அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய சந்தையில் நிஸான் விற்பனை செய்யும் கார்களின் எண்ணிக்கை 4 ஆக உயரவுள்ளது. ஆம், இந்திய சந்தையில் 2 புத்தம் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு நிஸான் நிறுவனம் தயாராகி வருகிறது.

கியாவின் விலையுயர்ந்த புது எலக்ட்ரிக் கார் அறிமுகம்!!

கியா (Kia) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரேயொரு எலக்ட்ரிக் கார், இவி6 (EV6) ஆகும். பல இலட்ச ரூபாய் மதிப்பில் விலைமிக்க எலக்ட்ரிக் காராக இருப்பதால், கியா இவி6 காரின் விற்பனை பெரிய அளவில் இல்லை. இருப்பினும், இவி6 எலக்ட்ரிக் காரை மேம்படுத்தி கியா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதை கடந்த ஜனவரி மாதத்தில் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியிலேயே பார்த்திருந்தோம். 2025 ஆட்டோ எக்ஸ்போவில் கியா இவி6 ஃபேஸ்லிஃப்ட் (Facelift) கார் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்தது.

நாளை அறிமுகமாகிறது கிளாசிக் 650.. இதோ முழு விபரம்!

இந்தியர்களின் பிரியமான பைக் மாடல்களில் ஒன்று ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350). இந்த பைக்கே இந்தியர்களுக்காக 650 சிசி பைக் அவதாரம் எடுத்திருக்கின்றது. அதாவது, 650 சிசி பைக்காகவும் ராயல் என்பீல்டு கிளாசிக் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதன் அறிமுக நிகழ்வே நாளை அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் நிறுவனத்தின் ஆறாவது 650 சிசி பைக் மாடலாக மாறும்.

ரூ 7410 கோடியை இந்த மாநிலத்தில் முதலீடு செய்த மாருதி!

மருதி சுஸுகி, ஹரியானாவில் உள்ள கார்கோதாவில் மூன்றாவது தொழிற்சாலையை அமைத்து, 2029 ஆம் ஆண்டுக்குள் 7.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் இலக்கை நிர்ணயித்து, உற்பத்தியை அதிகரிக்கிறது.

ஒன்னே முக்கா கோடி ரூபா கார்ல போனது அவங்களா!

இந்தியாவை பொறுத்தவரையில் திருமணம் நடந்து விட்டால், நடிகைகள் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விடுவது என்பது வழக்கமான ஒரு விஷயமாக உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து நடிகைகளும் திருமணம் முடிந்த கையோடு குழந்தை, குடும்பம் என 'செட்டில்' ஆகி விடுகின்றனர். ஒரு சில நடிகைகள் திருமணம் முடிந்து நீண்ட வருடங்களுக்கு பிறகு சினிமா துறையில் மீண்டும் 'கம்பேக்' கொடுக்கின்றனர் என்பது தனிக்கதை. ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் விதிவிலக்காக திருமணம் முடிந்தாலும், திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கின்றனர். குழந்தை பிறந்தாலும் கூட, தங்களது கரியருக்கு அவர்கள் பிரேக் விடுவதில்லை.

மஹிந்திரா காரை வாங்கிய முன்னாள் ஊழியர்!!

டெக் மஹிந்திரா (Tech Mahindra) நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ சிபி குருநானி. இவர் புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் கார் (Mahindra XEV 9e Electric Car)-ஐ வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் பதிவையே அவர் அவருடைய எக்ஸ் கணக்கின் வாயிலாக பகிர்ந்திருக்கின்றார். 'தன்னுடைய அலுவலகத்திற்கு முதல் முறையாக நெபுலா நீல நிறம் கொண்ட எக்ஸ்இவி 9இ காரில் சென்றேன்' என்றே அந்த பதிவில் அவர் தெரிவித்திருக்கின்றார்.
Advertisement

எலக்ட்ரிக் காரை வாங்கி இருக்கும் இந்த யூடியூப்பரை தெரிகிறதா?

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் சமீபத்தில் அதன் பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-இன் டெலிவிரிகளை துவங்கியதில் இருந்து ஷோரூம்களில் கூட்டம் அலைமோதுகிறது. பாமர மக்களில் இருந்து சினிமா பிரபலங்கள் வரையில் பலரும் வரிசையாக மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார்களை வாங்கி வருகின்றனர். பிஇ 6 மற்றும் எக்ஸ்.இ.வி 9இ எலக்ட்ரிக் கார்களுக்கான புக்கிங் கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கியதுமே பெரும் பணக்காரர்கள் கூட இந்த எலக்ட்ரிக் கார்களை ஆர்வமாக முன்பதிவு செய்திருப்பதை இதில் இருந்து அறிய முடிகிறது.

சூப்பர் ஸ்டார் இவரு! இவ்வளவு சிம்பிளான கார்ல வராரு?

மலையாள சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் மோகன் லால் சமீபத்தில் டில்லியில் சாதாரண காரில் வந்திறங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. பொதுவாக சினிமா பிரபலங்கள் பலர் காஸ்ட்லியான கார்களை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால் நடிகர் மேகன்லால் சாதாரணமான ஒரு காரில் பயணித்தது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.மோகன்லால் போன்ற பெரிய நடிகர் பயன்படுத்திய சாதாரண கார் எது? இதை இவர் மட்டுமல்லாமல் மற்ற பிரபலங்களும் பயன்படுத்த என்ன காரணம்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சாதாரண டாக்ஸியில் போனது அவங்களா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta). எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த இந்த கார், 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எனவே அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான காரை வாங்க கூடிய வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. குறிப்பாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை நிறைய பேர் டாக்ஸி தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட கார் டெலிவரி சம்பவம்..

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பிரமாண்ட கார் டெலிவரி சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. ஒரே நாள், ஒரே நேரம், ஒரே இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு காரை டெலிவரி வழங்கி இருக்கின்றது ஓர் கார் டீலர்ஷிப் நிர்வாகம். மஹிந்திரா (Mahindra) கார் விற்பனையாளரே இந்த அரிய வகை நிகழ்வை அரங்கேற்றி இருக்கின்றார். மஹிந்திராவின் லேட்டஸ்ட் அறிமுகமான எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) ஆகிய கார் மாடல்களையே டெலிவரி கொடுத்திருக்கின்றனர்.

ஜப்பானே இந்திய ரயில்வேய வியந்து பார்க்குது!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் ரயில், முதலில் டிசம்பர் 2024க்கு திட்டமிடப்பட்டது, தொழில்நுட்ப சவால்கள் காரணமாக ஜூன் 2024 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் வடிவமைப்பு நிலைத்தன்மை மற்றும் பூஜ்ஜிய புகை வெளியீட்டை மையமாகக் கொண்டுள்ளது.

7 வயது மகனுக்கு கொடுக்குற பிறந்த நாள் பரிசா இது?

பி.எம்.டபிள்யூ (BMW) கார்களை வாங்குவோரை பரவலாக நிறைய இடங்களில் பார்க்க முடியும். ஆனால், பிஎம்டபிள்யூ க்ரூப்பின் கீழ் செயல்படும் மினி (MINI) நிறுவனத்தின் கார்களை வாங்குவோரை அதிக எண்ணிக்கையில் பார்க்க முடிவதில்லை. ஏனெனில், மினி கார்கள் பெயருக்கேற்ப அளவில் சிறியவைகளாக உள்ளன. இருப்பினும் அதேநேரம், பிஎம்டபிள்யூ கார்களை போன்று மினி கார்களின் விலைகளும் அதிகமாக நிர்ணயிக்கப்படுகின்றன. இதனால், மினி கார்களை வாங்குபவர் யாரென்று பார்த்தால், ஏற்கனவே குறைந்தது 2, 3 சொகுசு கார்களை வைத்திருக்கும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர்.

எந்த கார், பைக்குக்கு இன்று விருது கிடைக்கும்?

ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் 2025 இன்று அறிவிக்கப்படவுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு வெளியான கார் மற்றும் பைக்குகளை ஜூரிக்கள் ஆய்வு செய்து இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. கடந்த மாதமே இந்த விருதுக்கான சோதனைகள் எல்லாம் முடிந்த நிலையில் தற்போது விருது அறிவிப்பு நிகழவுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பிற மாநில வாகனங்களை விரட்டி விரட்டி ஃபைன் போட்றாங்க!!

சாலை வரி (Road Tax) ஆனது எந்தவொரு நாட்டிற்கும் அவசியமான ஒன்றாகும். நாட்டின் சாலை வசதிகளில் இருந்து ஆட்டோமொபைல் துறை வரையிலானவற்றை மேம்படுத்துவதற்கு சாலை வரிகள் தான் அடிப்படையாக உள்ளன. இந்தியாவில் சாலை வரிகளை அந்தந்த மாநில அரசாங்கங்கள் வசூலிக்கின்றன. புதியதாக ஒரு வாகனம் வாங்கும்போது சாலை வரியை செலுத்தினால்தான் ஆர்டிஓ-இல் அந்த வாகனத்திற்கான பதிவெண் வழங்கப்படும். இந்த வேலைகள் அனைத்தையும் டீலர்ஷிப் ஷோரூம் அதிகாரிகள் செய்துக் கொடுப்பதால், இதனை பற்றி உங்களில் நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கலாம்.
Advertisement

ரூ.35 லட்சத்தில் இந்தியாவில் 7 ஏர்பேக்குகளை பெறும் கார்கள்!

டாடா சஃபாரி (Tata Safari): டாடா சஃபாரி காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களான அக்கம்ப்ளீஷ்டு (Accomplished) மற்றும் அக்கம்ப்ளீஷ்டு பிளஸ் (Accomplished Plus)-இல் 7 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. மேலும், இந்த வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.35 லட்சத்திற்கு உள்ளாக ரூ.23.85 லட்சம் மற்றும் ரூ.26.5 லட்சமாக தற்சமயம் உள்ளன.

அடி மாட்டு விலையில் விற்கப்படும் 9 சீட்டர் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8,690 பொலிரோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10,113 ஆக இருந்தது. அதாவது 1,423 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதிகம் விற்பனையாகும் காரை தூக்கி போட தயாராகிட்டாங்க!

இந்தியாவின் செடான் கார் (Sedan Car) பிரிவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல் ஒன்று விரைவில் விற்பனையில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) கார் மாடலே அது ஆகும். இந்த தகவல் இந்திய செடான் கார் காதலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்து இருக்கின்றது. சியாஸ், இந்தியாவில் இருந்து வெளியேற இருப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஏப் 1ம் தேதி முதல் பஸ், லாரிகளில் இது கட்டாயம்!

இந்தியா 2026 ஆம் ஆண்டு வரை வாகனங்களுக்கான கட்டாய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது, வணிக மற்றும் தனிப்பட்ட வாகனங்களுக்கான சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

அதிகம் மைலேஜ் தரும் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கார்கள்!

இந்தியாவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Transmission) வசதிக் கொண்ட கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. குறிப்பாக, பெட்ரோல் எஞ்சின் (Petrol Motor) உடன் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்களுக்கு நாட்டில் இரட்டிப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என கூறலாம். இந்த பதிவில் பெட்ரோல் எஞ்சின், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் விற்பனைக்குக் கிடைக்கும் அதிகம் மைலேஜ் தரும் டாப் ஐந்து கார் மாடல்களைப் பற்றிய தகவலையே பார்க்க இருக்கின்றோம்.