கேமிரா முன்னிலையில் பைக்கிற்கு முத்தமிட்ட பிரபல நடிகர்..

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் பலர் அடிமையாக உள்ளனர். சில பிரபலங்களும்தான். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது ஓர் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நடிகர் ஒருவர் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்கை வாங்கி இருக்கின்றார். அவர் வாங்கி இருப்பது வழக்கமான ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. பிரத்யேகமாக தன்னுடைய டேஸ்ட்டிற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்யப்பட்ட பைக் (Custom-Built Bike)கையே அவர் வாங்கி இருக்கின்றார்.

இவரது செல்வாக்கிற்கு வீட்டிற்கே வந்து கார் டெலிவிரி!!

ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களை பிடிக்காதவர்களே கிடையாது என சொல்லலாம். அந்த அளவிற்கு, கம்பீரமான உடலமைப்பு உடன் எவரொருவரையும் கவரக்கூடிய லக்சரி அம்சங்கள் உடன் ரேஞ்ச் ரோவர் கார்களை லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனம் உருவாக்குகிறது. மற்ற வெளிநாடுகளை போல், இந்தியாவிலும் ரேஞ்ச் ரோவர் கார்களை வாங்குவதற்கு பலர் விரும்பும் நிலையில், பிரபல கேரள நகை உரிமையாளர் ஒருவர் மனைவி உடன் ஷோரூமுக்கு சென்று பிராண்ட்-நியூ ரேஞ்ச் ரோவர் காரை டெலிவிரி பெற்றுள்ளார். இதுதொடர்பான படங்கள் இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளன.

அடுத்தடுத்த இவி அணிவகுப்பை தயார் செய்த மாருதி!

மாரூதி சுசுகி, புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி இந்தியாவில் 50% சந்தைப் பங்கைப் பிடிக்க திட்டமிட்டுள்ளது, இது eVitara மின்சார SUV உடன் தொடங்குகிறது.

சொகுசு காரில் வந்த பிரபல மனிதரின் முன்னாள் மனைவி!

இந்தியாவில் விவாகரத்து வழக்குகள் (Divorce Cases) அதிகரித்து கொண்டே வருகின்றன. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமீப காலமாக தொடர்ச்சியாக விவாகரத்து பெற்று வருகின்றனர். இது அவர்களது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. கூடவே திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விவாகரத்து பெறும் சமயங்களில், அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது தொடர்பான தகவல்களும் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த வரிசையில் சமூக வலை தளங்களில் கிரிக்கெட் வீரர் ஒருவரின் விவாகரத்து சம்பவம் சமீப காலமாக தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
Advertisement

ரெனால்ட் கார்களிலும் சிஎன்ஜி வந்திருச்சு..

இந்தியாவில் சிஎன்ஜி கார் (CNG Car)-கள் விற்பனையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் முன்னணியில் உள்ளது. இரண்டாவது இடத்திலேயே டாடா மோட்டார்ஸ் (Tata Motors) உள்ளது. இவர்கள் மட்டும் அல்ல சிஎன்ஜி கார்கள் பிரிவில் ஹூண்டாய் (Hyundai) நிறுவனமும் சிறந்த போட்டியாளனாக விளங்கிக் கொண்டு இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே புதிய சிஎன்ஜி கார் விற்பனையாளராக ரெனால்ட் (Renault) நிறுவனமும் மாற இருப்பது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனம் தன்னுடைய முக்கிய தயாரிப்புகள் சிலவற்றிற்கான சிஎன்ஜி கிட்டை அது அறிமுகம் செய்திருக்கின்றது.

பள்ளத்தில் கவிழ்ந்தும் ஓனர் உயிரை காப்பற்றிய ஹோண்டா சிட்டி

ஊட்டியில் விபத்துக்குள்ளான தனது ஹோண்டா சிட்டி காரை யூடியூபர் ஒருவர் மீண்டும் சரி செய்து பயன்படுத்தி விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்த்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பலரை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கிறது. சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காரை இவர் மீண்டும் சரி செய்து பயன்படுத்தி வருகிறார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் CNG வாகன விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

அரசின் ஆதரவும் விரிவடையும் கட்டமைப்பும் இருந்தபோதிலும், எரிபொருள் விலை உயர்வு இருந்தபோதிலும், 2025 ஆம் நிதியாண்டில் 11 லட்சம் CNG வாகனங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒற்றை கார் மாடலுக்காக ஆலையில் மாற்றம் செய்யும் எம்ஜி!!

இங்கிலாந்து நாட்டு நிறுவனமாக பிறந்து இப்போது சீன நிறுவனத்தின் கைகளுக்கு மாறியிருக்கும் கார் உற்பத்தி நிறுவனம் எம்ஜி மோட்டார் (MG Motor). இந்த நிறுவனம் இப்போது இந்தியாவின் ஜேஎஸ்டபிள்யூ (JSW) நிறுவனத்துடன் இணைந்து ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் என்கிற பெயரில் செயல்பட்டு வருகின்றது. ஜப்பானின் சுஸுகி (Suzuki)-யும், இந்தியாவின் மாருதி (Maruti)-யும் இணைந்து இந்தியாவின் வாகன சந்தையை ஆட்சிச் செய்துக் கொண்டிருக்கின்றதை போல இவர்களும் பேராதிக்கம் செய்ய வேண்டும் என்கிற நோக்கிலேயே இணைந்திருக்கின்றனர்.

1 வினாடியில் எல்லாம் முடிந்தது! விபத்துக்கு காரணம் இதுதான்!!

ஐயோ மீண்டும் மீண்டுமா...? என கேட்கும் அளவிற்கும் நடிகர் அஜித்குமார் (Actor Ajithkumar) மீண்டும் கார் விபத்தில் சிக்கியுள்ளார். சமீப காலத்தில் கார் பந்தயங்களில் நடிகர் அஜித் சந்தித்துள்ள 3வது விபத்து இதுவாகும். அஜித் ஓட்டிய ரேஸ் கார் விபத்தில் சிக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது நடிகர் அஜித்குமார் எவ்வாறு உள்ளார்? எங்கு நடந்தது இந்த சம்பவம்? வாருங்களை அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ரூ80 லட்சத்திற்கு கார் வாங்கியது இவரா?

தமிழில் பிரபலமான டிவி நிகழ்ச்சியான "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியை ஹிந்தியில் காப்பியடித்து கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "லாஃப்டர்ஸ் செஃப்" என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான சமர்த் ஜூரெல் என்பவர் தற்போது சுமார் 80 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார். இவ்வளவு அதிக விலை மதிப்பு கொண்ட காரர் இவர் எப்படி வாங்கினார்? இந்த காரில் என்ன அம்சங்கள் எல்லாம் இருக்கிறது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கிராபிக்ஸ் எல்லாம் இல்ல! உண்மையிலேயே இந்த கார் பறக்கும்!

அலெப் ஏரோநாட்டிக்ஸ் நகர்ப்புற சூழலில் தனது மாடல் ஏ பறக்கும் காரை சோதித்து பார்த்ததன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 3,300 முன்பதிவுகள் மற்றும் FAA சான்றிதழ் பெற்றுள்ள இந்த வாகனம் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நிலையான போக்குவரத்திற்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்துகிறது.

ஒரு கி.மீ போக வெறும் 1 ரூபாய் தான் செலவாகும்!

டிவிஎஸ் 2025 ஆட்டோ எக்ஸ்போவில் உலகின் முதல் சிஎன்ஜி இயங்கும் ஸ்கூட்டர் மற்றும் அபாச்சி ஆர்டிஎக்ஸ் 300 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி, சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்து தீர்வுகளை ஊக்குவிக்கிறது.
Advertisement

சிவப்பு கலர் கார்கள் அதிகம் விபத்தில் சிக்குது!

கார் நிறம் எவ்வாறு கண்ணுக்குத் தெரியும் தன்மையைப் பாதிக்கிறது மற்றும் விபத்து விகிதங்களை பாதிக்கிறது என்பதை கண்டறியவும். இலகுவான நிழல்கள் பாதுகாப்பை மேம்படுத்துகின்றன, அதே நேரத்தில் இருண்ட நிழல்கள் சாலையில் அபாயத்தை அதிகரிக்கின்றன.

லிட்டருக்கு 25km மைலேஜ் தரும் மாருதி காருக்கே நல்ல டிமாண்ட்!

இந்தியா உள்பட உலகம் முழுக்கவே எஸ்யூவி கார்களை காட்டிலும் செடான் ரக கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை சமீப காலத்தில் வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவில் தற்போதைக்கு குறைந்த விலையில் வெறும் 10 செடான் ரக கார் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், அவற்றின் விற்பனை எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் கணிசமாக குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2025 ஜனவரி மாதத்திலும் இந்தியாவில் செடான் கார்களின் விற்பனை குறைந்துள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம், வாங்க.

படத்துல இருக்க பிரைவேட் ஜெட் விளையாட்டு வீரருக்கு சொந்தமானதா

பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பிரைவேட் ஜெட் விமானத்தைத் தனக்கு சொந்தமாக வைத்திருக்கின்றார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. உலக புகழ் பெற்ற கால்பந்தாட்ட விளையாட்டு வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ-வே அந்த விளையாட்டு வீரர் ஆவார். ஆமாங்க, இவரே பிரைவேட் ஜெட் விமானம் ஒன்றை தனக்கு சொந்தமாக வைத்திருக்கின்றார். பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் ஆடம்பர கார்களை வாங்க ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கின்ற சூழலில் ரொனால்டோ ஜெட் விமானத்தை வைத்திருப்பதில் ஆர்வமிக்கவராக காட்சியளிக்கின்றார்.

இந்த 3 காரை இனி யாராலும் வாங்க முடியாது!

2025 இல், ஆடி மற்றும் டாடா பல மாடல்களை நிறுத்துகின்றன, இதில் மாரூதி சுசுகியின் சியாஸ் அடங்கும். இது தொழில்துறையின் மின்சார வாகனங்களுக்கான மாற்றத்தை பிரதிபலிக்கிறது.

ஸ்பீடு பிரேக்கர்களில் தாழ்வான ஸ்போர்ட்ஸ் கார்கள் பத்திரம்!!

வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான ஸ்போர்ட்ஸ் கார் (Sports Car) நிறுவனங்கள் இந்தியாவிற்கு வராததற்கு முக்கியமான காரணம், நம் நாட்டின் சாலைகளின் தரம் ஆகும். இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு விரைவுச்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன என்றாலும், இன்னும் பெரும்பாலான குறு நகரங்கள் மற்றும் கிராம புறங்களில் சாலைகளின் தரம் மோசமாகவே உள்ளது. இதனாலேயே, விலையுயர்ந்த கார்களை வாங்க நம் நாட்டில் செல்வந்தர்கள் நிறைய பேர் பயப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, நம் நாட்டு சாலைகளில் ஸ்பீடு பிரேக்கர்கள் (Speed Breakers) சிறிய மலை அளவிற்கு உயரமாக அமைக்கப்படுகின்றன.

ராஜா, ராணி போல 5 கோடி ரூபா காரில் வந்திறங்கிய நட்சத்திர ஜோடி

ராஜா, ராணி சாரட்டு வண்டியில வந்து இறங்குவது போல இங்கே இரண்டு நடிகர்கள் ஐந்து கோடி ரூபா காரில் வந்திறங்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ரன்பீர் கபூர் மற்றும் அவரது மனைவி ஆலியா பட் இவர்களே அந்த காரில் வந்தவர்கள் ஆவர். திருமணமானதை மறந்து இப்போதும் இவர்கள் காதல் ஜோடிகளை ஒன்றாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். எங்கே சென்றாலும் இருவரும் இணைய பிரியா ஜோடியை ஒன்றாகவே வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவின் காமெடி குயின் இவர்தான்னு சொல்றாங்க!

நகைச்சுவை நடிகர்களை அதிக எண்ணிக்கையில் பார்த்திருப்பீர்கள். ஆனால், நகைச்சுவை நடிகைகளின் எண்ணிக்கை இந்தியா முழுவதுமே சற்று குறைவுதான். தமிழில், மனோரம்மா, கோவை சரளா என விரல்விட்டு எண்ணிவிடலாம். இருப்பினும், புதியது புதியதாக நகைச்சுவை நடிகைகள் அவ்வப்போது சினிமாவிற்குள் எண்ட்ரீ கொடுத்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், பாலிவுட் சினிமாவில் கிட்டத்தட்ட கடந்த 15 வருடங்களாக காமெடி நடிகையாக ஜொலித்து வருபவர், பார்தி சிங் (Bharti Singh) ஆவார். 2008ஆம் ஆண்டிலேயே திரைத்துறையை நோக்கிய இவரது பயணம் துவங்கிவிட்டது.

ஷோரூமுக்கு வரவங்க எல்லாரும் இந்த கலரை கேட்டு வாங்க போறாங்க!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வாகனங்களுள் ஒன்று, தார் ராக்ஸ் (Thar ROXX) ஆகும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மஹிந்திரா வாகனத்தை அதற்குள்ளாகவே சிலர் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டுள்ளனர். இதனாலேயே கஸ்டமர்களுக்கு வேலை வைக்க வேண்டாம் என்பதற்காக மஹிந்திரா நிறுவனமே தங்களது தார் ராக்ஸ் வாகனத்தை அவ்வப்போது அப்டேட் செய்துவிடுகிறது. அந்த வகையில், பிரவுன் நிறத்திலான கேபின் உடன் தார் ராக்ஸ் வாகனம் ஒன்று டீலர்ஷிப் ஷோரூமுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.
Advertisement

1.70 கோடி ரூபா கார்ல வந்தது அவங்களா!

இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் கார்களுக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS) காரை திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வைத்துள்ளனர். இது மிகவும் விலை உயர்ந்த ஃபுல்-சைஸ் சொகுசு எஸ்யூவி (Full-size Luxury SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். எனவே நல்ல விசாலமான இடவசதி கொண்ட சொகுசு கார்களில் ஒன்றாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் அறியப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கார், 7 இருக்கைகளை கொண்டதாகும்.

ஜாவா 350 லீகசி எடிசன் ரூ.1.99 லட்சத்தில் அறிமுகம்!!

ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் (Jawa Yezdi Motorcycles), இந்தியாவில் 50, 60 வருடங்களுக்கு முன்பே மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்த பழமையான நிறுவனம். இடையில் பெரிய இடைவெளியை விட்ட இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் கடந்த சில வருடங்களாக தீவிரமாக உள்ளன. புதியது, புதியதாக மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்து ஜாவா தனக்கென ஒரு கஸ்டமர் கட்டமைப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2024ஆம் ஆண்டில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட பைக் தான், ஜாவா 350 ஆகும்.

கார் கதவை திறந்து விட்றதுக்கே நீ நான்னு போட்டி போட்றாங்க!

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனத்தின் கார்களுக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் பட்டாளம் இருக்கிறது. எனவே இந்தியாவின் சொகுசு கார் (Luxury Car) சந்தையை ஆண்டு கொண்டிருக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக பிஎம்டபிள்யூ திகழ்கிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்கள், சொகுசு வசதிகளை மட்டுமல்லாது, கவர்ச்சிகரமான டிசைன் மற்றும் செயல்திறன் மிக்க இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளன. இதனால்தான் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் வாடிக்கையாளர் வட்டம் மிகப்பெரியதாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரையில், தொழில் அதிபர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் என பலரும் பிஎம்டபிள்யூ கார்களை வைத்துள்ளனர்.

பைக் போல மைலேஜ் தரும் கார்கள் இத்தன இந்தியாவிற்கு வர போகுதா!

இந்தியர்கள் மிகப் பெரிய மைலேஜ் பிரியர்கள் என்பது உலகம் அறிந்த ஒன்று. இதனால்தான் நாட்டில் ஹைபிரிட் (Hybrid) அம்சம் கொண்ட கார்கள் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. மைலேஜை அதிகப்படுத்தி தரக் கூடிய ஓர் தொழில்நுட்பமே ஹைபிரிட் ஆகும். இந்த அம்சம் கொண்ட கார்களுக்கு நாட்டில் சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதைக் கவனத்தில் கொண்டே கார் உற்பத்தியாளர்கள் இந்தியாவிற்காக ஹைபிரிட் டெக்னாலஜிக் கொண்ட கார் மாடல்கள் சிலவற்றை ஒதுக்கி இருக்கின்றனர்.

15 வருஷ பழைய காரை வாங்கிய கோடியில் சம்பாதிக்கும் நடிகர்!

பிரபல நடிகரும், பிரபல நடிகரின் மகனுமான துல்கர் சல்மான், மிகப் பெரிய கார் காதலர் என்பது உங்களில் எத்தனை பேருக்கும் தெரியும். அவருடைய அப்பா மம்மூட்டியும் ஓர் தீவிர கார் காதலர் ஆவார். இவருக்கு தப்பாமலேயே துல்கர் சல்மான்-ம் பிறந்திருக்கின்றார். இதற்கு சான்றாகவே ஓர் சம்பவத்தை அவர் நிகழ்த்தி இருக்கின்றார். தற்போது தன்னுடைய கார் சேகரிப்பில் புதிதாக ஓர் காரை அவர் இணைத்திருக்கின்றார். ஆனால், அது பிராண்டு நியூ கார் அல்ல.