இந்த காரை வெறும் 24 பேர் தான் வாங்கியிருக்காங்க!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஜனவரி 17, 2025 அன்று கிரேட்டா எலக்ட்ரிக் காரை வெளியிட உள்ளது. ஐயோனிக் 5 விற்பனை குறைந்து வரும் நிலையில், தனது மின்சார வாகன வரிசையை வலுப்படுத்தும் நோக்கம் இதன் பின்னணியில் உள்ளது.

ரேஸ் காரில் விபத்தில் சிக்கிய அஜித்! பரபரப்பு வீடியோ!

துபாயில் நடிகர் அஜித் குமார் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபடும்போது விபத்தில் சிக்கிய வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விரைவில் துவங்கவுள்ள கார் ரேஸ் பந்தையத்திற்காக அவர் பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருக்கும் போது இ்நத சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் விலை அதிகரிப்பு!!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'விண்ட்சர் இவி' (Windsor EV) என்கிற பெயரில் அதன் புதிய எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ அறிமுகம் செய்தது. வழக்கமாக மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் என எம்ஜி விண்ட்சர் இவி -ஐ நாம் அசால்ட்டாக எண்ணிவிட முடியாது. ஏனெனில், அந்த அளவிற்கு மக்கள் அதிகம் பேரால் விற்பனையில் ஜொலித்து வருகிறது. எம்ஜி விண்ட்சர் இவி மார்க்கெட்டுக்கு வந்ததும் செய்த தரமான சம்பவம் என்றால், அது டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலக்ட்ரிக் காரை விற்பனையில் முந்தியது ஆகும்.

தினமும் ஒரு காஸ்ட்லி காரை வாங்கற அளவுக்கு இவர் பெரிய ஆளா!

இந்தியாவில் மக்கள் ஒரு புதிய காரை வாங்குவதற்கே திணறி கொண்டுள்ளனர். ஆனால் அதே இந்தியாவில் ஒருவர் 3 நாட்களில் 3 கார்களை வாங்கியுள்ளார். 3 நாட்களில் 3 கார்கள் என்பதால், அவற்றை மிகவும் எளிமையான கார்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவை அனைத்துமே மிகவும் விலை உயர்ந்த கார்கள் ஆகும். நாம் தற்போது இங்கே பேசி கொண்டுள்ள நபரின் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கம், கடந்த 3 நாட்களாக புதிய கார்களை வாங்கியிருப்பது தொடர்பான பதிவுகளால் நிரம்பி வழிகிறது.
Advertisement

ரூ.999இல் ஸ்கூட்டர் தரும் யமஹா... பொங்கள் சிறப்பு சலுகை!!

பொங்கல் பண்டிகை (Pongal Festival) நெருங்கி வருகிறது. தீபாவளிக்கு அடுத்து இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் பண்டிகையை சொல்லலாம். ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கு மறக்காமல் சலுகைகளை அறிவித்துவிடும் நிறுவனம் யமஹா (Yamaha) ஆகும். அந்த வகையில் இந்த வருடமும் தமிழ்நாட்டில் யமஹா அதன் பிரபலமான 2-வீலர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. அவை என்னென்ன என்பதை பற்றியும், சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள யமஹா 2-வீலர்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மிக்ஸி, கிரைண்டரை தவிர இந்த கார்ல எல்லாமே இருக்குது போல!

நிலையான எதிர்காலத்திற்கான முன்னணி தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்கை 2025 ஆம் ஆண்டு பாரத் மொபிலிட்டி உலகளாவிய கண்காட்சியில் காணலாம்.

சின்ன வயசுல இருந்தே ஆசைப்பட்ட காரை வாங்கிய தேவதை!

சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற கனவு நிறைய பேருக்கு உள்ளது. ஆனால் ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்களை (Luxury Cars) சொந்தமாக்க வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர். எனினும் ரச்சனா மஹாடிம்மனே (Rachana Mahadimane) கொஞ்சம் வித்தியாசமானவர். பெங்களூர் (Bangalore) நகரை சேர்ந்த இந்த பெண், சமூக வலை தளங்களில் பிரபலமாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் மட்டும் இவரை சுமார் 1.50 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். எனவே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் இவரை நீங்கள் பார்த்திருக்கலாம்.

இஎம்ஐ கட்டாம தப்பிக்க இப்படி ஒரு வழியா?

மும்பை போலீஸ் ஒரே பதிவு எண்ணுடன் இரண்டு எர்டிகா கார்களை உள்ளடக்கிய ஒரு வழக்கை கண்டறிந்துள்ளது, இது வாகன உரிமையாளரால் நிதி மோசடி முயற்சிகளைப் போன்றது.

பெட்ரோல் பங்க்குகளை மூட போகும் முதல் நாடு அநேகமா இதுதான்!!

பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) வாகனங்களில் இருந்து உலகம் மெல்ல மெல்ல மாற்று எரிபொருள் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசலுக்கு பதிலாக ஹைப்ரீட் (Hybrid), சிஎன்ஜி (CNG), ஹைட்ரஜன் (Hydrogen) என சில மாற்று எரிபொருள்கள் புழக்கத்திற்கு வந்தாலும், உலகின் எதிர்கால போக்குவரத்து எலக்ட்ரிக் (Electric)-ஐ சார்ந்துதான் இருக்கும் என கூறப்படுகிறது. உலகமே எனும்போது அதில் நமது இந்தியா மட்டும் என்ன விதிவிலக்கா... இதனை புரிந்துக்கொண்ட நம் மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் கடந்த சில மாதங்களாகவே முனைப்பு காட்டி வருகிறது.

ரெனால்ட் டஸ்டர் கார் இந்த வருஷமாவது வருமா?

வரும் ஆண்டுகளில் ரெனால்ட் இந்தியா வகுத்துள்ள பரந்த திட்டங்களைத் தொடர்ந்து இந்தியாவில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டரின் வெளியீடு 2026க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லைசன்ஸ் வாங்க கூட இன்னும் வயசு எட்டல... புதிய காருடன் நடிகர்

ஒரு சில சமயங்களில் திரைப்படங்களுக்கு கிடைக்காத வரவேற்பு கூட தொலைக்காட்சி சீரியல்களுக்கு கிடைப்பதை பார்க்க முடியும். ஏனெனில், டிவி சீரியல்கள் (TV Serials) நேரடியாக மக்களின் வீட்டிற்குள்ளேயே சென்று அவர்களின் மனதில் இடம்பிடித்து விடுகின்றன. அதாவது, திரையரங்குகளுக்கு செல்லாதவர்கள் கூட சீரியல் தொடர்களுக்காக டிவி முன் மூழ்கி கிடப்பதை பார்க்கலாம். அதுமட்டுமின்றி, டிவி சீரியல்கள் தினந்தோறும் நீண்ட நாட்களுக்கு ஒளிப்பரப்பப்படுவதால், இடையில் மக்களை கவர்வதில் கோட்டை விட்டாலும், அதன்பின் விட்ட இடத்தை பிடிப்பதற்கு அவகாசம் உள்ளது. இதனாலேயே டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர்கள் ஏராளம்.

3கதவுடைய காருக்கு இப்படி ஒரு வரவேற்பா! 2 லட்சத்த கடந்தாச்சு!

இந்தியாவில் மூன்று கதவுகளை மட்டுமேக் கொண்ட கார் மாடல் ஒன்றிற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது வேறு எதுவும் இல்லைங்க, மஹிந்திரா தார் (Mahindra Thar) கார் மாடல்தான் அது. தார், இந்தியாவில் மூன்று கதவுகள் மற்றும் ஐந்து கதவுகள் என இரண்டு விதமான வெர்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஐந்து கதவுகளைக் கொண்டது தார் ராக்ஸ் (Thar Roxx) என்கிற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது விற்பனைக்கு வந்த போதிலும் 3 கதவுகளை மட்டுமே கொண்ட தார் காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கொண்டிருக்கின்றது.
Advertisement

மல்லுக்கட்டி நிற்கும் டாடா- மஹிந்திரா... 2025 யாருக்கு?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) இரண்டும் முழுக்க முழுக்க இந்தியாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் கார் நிறுவனங்கள் ஆகும். வெளிநாட்டு கார் நிறுவனங்களில் இருந்து இந்திய மக்களின் பார்வை மெல்ல மெல்ல இந்திய கார் நிறுவனங்களை நோக்கி நகர்ந்து வருவதால், அதற்கேற்ப டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் கார் விற்பனையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டாடா மோட்டார்ஸின் கார்கள் விற்பனை ஆனது கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

குழந்தைகளுடன் வந்து பென்ஸ் சொகுசு காரை வாங்கிய ஆல்யா மானசா..

பிரபல டிவி சீரியல் நடிகையான ஆல்யா மானசா மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார் மாடல் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் வாங்கி இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் இ-கிளாஸ் எல்டபிள்யூ (E-Class LWB) சொகுசு கார் மாடல் ஆகும். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர சொகுசு செடான் ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாக்கும் அதிகம் ஆகும்.

2025 லேண்ட் ரோவர் டிஃபெண்டர் இந்தியாவில் அறிமுகம்!!

லேண்ட் ரோவர் (Land Rover), உலகளவில் லக்சரி கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம். குறிப்பாக, ரேஞ்ச் ரோவர் (Range Rover) மற்றும் டிஃபெண்டர் (Defender) கார்கள் லேண்ட் ரோவரில் இருந்து உலகளவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுகின்றன; இந்தியாவிலும் தான். இந்த நிலையில், இந்தியாவில் புதிய மேம்படுத்தப்பட்ட டிஃபெண்டர் காரை லேண்ட் ரோவர் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

50 லட்ச ரூபா பைக்கை சர்வ சாதாரணமா ஓட்டீட்டு போனது அவரா!

சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், பைக் ரைடர்கள் நிறைய பேர் ஒன்றாக அணிவகுத்து செல்வதை நம்மால் காண முடிகிறது. அவர்கள் பெரும்பாலானோர் ஓட்டியது ஹார்லி டேவிட்சன் (Harley Davidson) நிறுவனத்தின் பைக்குகள் ஆகும். இந்த பைக் ரைடர்கள் குழுவிற்கு தலைமை ஏற்று, ஒருவர் முன்னால் சென்று கொண்டிருப்பதையும் இந்த வீடியோவில் நாம் பார்க்கலாம். அவர் ஓட்டியது ஹார்லி டேவிட்சன் ரோடு கிளைடு (Harley Davidson Road Glide) பைக் ஆகும்.

மொத்தமா 14 டூ-வீலர்களை விற்பனைக்கு கொண்டு வர போறாங்க..

உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று மிகப் பெரிய எண்ணிக்கையில் இந்த புதிய ஆண்டில் இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. டுகாட்டி (Ducati)-யே அந்த நிறுவனம் ஆகும். ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தமாக 14 புதிய இரண்டு சக்கர வாகன மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவே அது அறிவித்து இருக்கின்றது. எனவே கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த 2025 ஆம் ஆண்டும் இந்திய இரண்டு சக்கர வாகன காதலர்களுக்கு விருந்தளிக்கக் கூடிய ஆண்டாக அமையும் என்பது இப்போதே தெரிய வந்திருக்கின்றது.

ஊரே வாங்க நினைக்கும் ஜாகுவார் காரில் சென்றது அவரா?

மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் உலக கோப்பையை பெற்று தந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கிரிக்கெட்டை தாண்டி தோனிக்கு கார் & பைக்குகள் என்றால் மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும். இதனாலேயே தோனியின் கேரேஜில் பல விலையுயர்ந்த கார் & பைக்குகள் குவிந்து கிடக்கின்றன. அவ்வாறு, தன்னிடம் உள்ள விலையுயர்ந்த ஜாகுவார் (Jaguar) காரில் தோனி தற்போது வெளியில் காட்சி தந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட படங்களும், வீடியோக்களும் இணையத்தில் கவனத்தை பெற்று வருகின்றன.

கம்பேக் கொடுக்கும் பஜாஜின் பழைய பைக் மாடல்..

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), நிறுவனத்தின் பழைய பைக் மாடல் ஒன்று இந்தியாவில் சீக்கிரமே கம்பேக் (Comeback) கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதாவது, முன்னதாக நிறுவனத்தின் கீழ் விற்பனையில் இருந்த பைக் மாடல் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறங்க இருக்கின்றது. சமீபத்தில், பஜாஜ் நிறுவனம் ஓர் டீசர் (Teaser)-ஜ வெளியிட்டு இருந்தது. அந்த டீசர் நிறுவனத்தின் புதிய பைக்கின் வருகையை உறுதிப்படுத்தும் இருந்தது. மேலும், டீசர் படத்தை வெளியீட்டைத் தொடர்ந்து பலரும் பல்வேறு விதமான கருத்துகளை முன் வைத்தனர்.

40 வருஷம் பழைய மஹிந்திரா வாகனம் என சொன்னால் நம்புவீர்களா?

மஹிந்திரா (Mahindra) கடந்த காலங்களில் இருந்து பல்வேறு தரமான வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அவ்வாறான தரமான வாகனங்களுள் ஒன்றுதான், மஹிந்திரா மார்ஷல் (Marshal) ஆகும். 1980, 90ஆம் காலக்கட்டங்களில் பயன்பாட்டில் இருந்த மார்ஷல் வாகனங்களுள் பெரும்பாலானவை தற்சமயம் இல்லை என்றாலும், இங்கு ஒரு மஹிந்திரா மார்ஷல் வாகனம் பட்டி, டிங்கரிங் பார்த்து ஷோரூமில் இருந்து இப்போதுதான் வெளியே எடுத்ததுபோல் பளபளப்பான தோற்றத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Advertisement

புஷ்பா படத்தை விஞ்சிய கடத்தல்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero). கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்கள் என எவ்விதமான வேறுபாடுகளும் இன்றி, மஹிந்திரா பொலிரோ பயன்படுத்தப்பட்டு கொண்டுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் மஹிந்திரா நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக பொலிரோ திகழ்கிறது. சரக்குகளை கொண்டு செல்லவும், மக்களை ஏற்றி செல்லவும் மட்டுமல்லாது, ஆஃப் ரோடு பயன்பாடுகளுக்கு கூட, மஹிந்திரா பொலிரோ காரை பலரும் உபயோகித்து கொண்டுள்ளனர். அந்த அளவிற்கு ஒரு முரட்டுத்தனமான காராக மஹிந்திரா பொலிரோ கருதப்படுகிறது.

8 லட்ச ரூபாய் கார்னு சொல்லி அறிமுகம் செஞ்சாங்க... இப்போ விலை

சிட்ரோன் (Citroen) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டில் பசால்ட் (Basalt) என்கிற கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டது. டாடா கர்வ் (Tata Curvv) காருக்கு போட்டியாக இதனை சிட்ரோன் நிறுவனம் அறிமுகம் செய்தது. மேலும், இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்துக்கு அதிக எண்ணிக்கையில் கஸ்டமர்களை பெற்றுத்தரக்கூடிய காராகவும் பசால்ட் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய காரின் விலையில் சில திருத்தங்களை புதிய 2025ஆம் ஆண்டை முன்னிட்டு சிட்ரோன் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

டிரைவிங் ஸ்கூலுக்கு பயன்படுத்த கூடிய காரா இது!..

டிரைவிங் ஸ்கூல்களில் பட்ஜெட் விலை கார்கள் பயன்படுத்தி வந்த காலம் மாறி தற்போது ஆடம்பர கார்களும் பயன்படுத்தும் சூழல் உருவாகி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஓர் சம்பவம் அரங்கேறியது. கடந்த வாரங்களுக்கு முன்னர் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3) சொகுசு காரை ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஒன்று பயன்படுத்திய நிகழ்வுதான் அது. ஓட்டுநர் பயிற்சியளிப்பதற்காகவே டிரைவிங் ஸ்கூல் இந்த காரை பயன்படுத்தி இருக்கின்றது. இந்த பலருக்கும்ம் ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்தது. ஓட்டுநர் பயிற்சி வாகனம் அது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக டிரைவிங் ஸ்கூல் போர்டு அதன் மேலே இடம் பெற்றிருந்தது.

மாருதி சாதனையை ஒரே காரில் முடிவுக்கு கொண்டு வந்த டாடா!

2024 ஆம் ஆண்டிற்கான கார் விற்பனையில் டாடா பஞ்ச் முன்னிலை வகிக்கிறது, மாரூதி சுஸுகியை விஞ்சியுள்ளது. அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் எதிர்கால டாடா மாடல்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

இந்த 10 கார்கள் தான் ஆட்டோ எக்ஸ்போவில் வரப்போகுது!

மாரூதி சுசுகி, ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவற்றின் அறிமுகங்களை உள்ளடக்கிய, பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் சமீபத்திய மின்சார வாகன புதுமைகளை கண்டுபிடிக்கவும்.