இந்தியாவில் மின்சார கார் விற்பனை 3 லட்சத்தை கடந்தது
ஆட்டோமொபைல்
- 20 hr, 15 min ago
இந்தியாவில் மின்சார கார்களுக்கான (Electric Cars) வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார கார்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் விளைவாக, நாட்டின் வருடாந்திர மின்சார கார் விற்பனை வரலாற்றில் முதல்முறையாக 3 லட்சம் யூனிட்டுகளைக் கடந்துள்ளது.