புதிய ஹோண்டா சிஆர்-வி காரில் இனி ஹைபிரிட் மட்டும்தான்
ஆட்டோமொபைல்
- 1 day ago
உலக அளவில் ஹைபிரிட் கார்களுக்கான வரவேற்பு மெல்ல வளர்ந்து வரும் நிலையில், முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா தனது முக்கியமான எஸ்யூவி மாடலில் அதிரடியான மாற்றத்தைச் செய்ய முடிவு செய்துள்ளது. அடுத்த தலைமுறை சிஆர்-வி காரில் வழக்கமான பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனை நீக்கிவிட்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்தை மட்டுமே வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.